என்ன கேட்காம யாரையாவது கல்யாணம் பண்ணுன அவ்ளோதான்!.. நடிகை சங்கீதாவிற்கு விஜய் போட்ட கண்டிஷன்…
Actress sangeetha and Vijay: 1997 கால கட்டம் முதலே சினிமாவில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா. ஆரம்பத்தில் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் அதிகமாக நடித்து வந்தாலும் பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளை பெற துவங்கினார் சங்கீதா.
கிட்டத்தட்ட 2006 இல் இருந்து அதிகமாக தமிழில் வாய்ப்புகளை பெற்ற சங்கீதா நான் அவன் இல்லை 2, பிதாமகன், காளை, நேபாளி போன்ற பல படங்களில் நடித்தார். இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே நடிகர் விஜய்யுடன் நல்ல நட்பில் இருந்தார் .

விஜயை விட குறைவான வயது உடையவர் என்பதால் விஜய் தனது தங்கை போலவே சங்கீதாவை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சங்கீதா திரைத்துறையில் யாரையாவது காதலித்து பிரச்சனையாகி விடக்கூடாது என்பதற்காக அவர் தமிழ் சினிமாவிற்கு வந்த போதே அவரை எச்சரிக்கை செய்துள்ளார் விஜய்.
சினிமாவில் யாரையும் காதலிக்க கூடாது அப்படி நீ காதலிப்பதாக ஏதாவது செய்தியை நான் கேட்டேன் என்றால் அவ்வளவுதான் என்று கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார் விஜய். அதனை தொடர்ந்து சங்கீதாவும் யாரையும் காதலிக்காமலே இருந்திருக்கிறார். இருந்தாலும் சில காலங்களுக்கு பிறகு அவருக்கு ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விஷயத்தை விஜய்யிடம் அவர் தெரிவித்திருக்கிறார் அவரை அழைத்து விசாரித்த விஜய். பிறகு இவர்கள் இருவரின் காதலையும் ஒப்புக்கொண்டார். அந்த அளவிற்கு தன் மீது அன்பு கொண்டவர் விஜய் என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் நடிகை சங்கீதா.