Connect with us

தமன்னாவை கண்ணீர் விட்டு அழ வைத்த படம்..! வெளிப்படையாக கூறிய தமன்னா…

Tamil Cinema News

தமன்னாவை கண்ணீர் விட்டு அழ வைத்த படம்..! வெளிப்படையாக கூறிய தமன்னா…

Social Media Bar

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. பெரும்பாலும் தமன்னா நடிக்கும் திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெறுவதாக இருக்கின்றன. இதனாலேயே இப்போதும் மார்க்கெட் குறையாத ஒரு நடிகையாக தமன்னா இருந்து வருகிறார்.

தமன்னா தமிழில் கேடி, கல்லூரி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் தமன்னாவிற்கு அதிக வரவேற்புகள் கிடைத்தன.

தொடர்ந்து தமிழில் சூர்யா, தனுஷ்,அஜித் என பெரிய நடிகர்களுடன் நடிக்க துவங்கினார் தமன்னா. தமன்னாவுக்கான மார்க்கெட் என்பது வெகு காலங்கள் தமிழில் இருந்து வந்தது. ஆனால் இப்போது அவருக்கு வயதாகி விட்டதால் கதாநாயகியாக அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நடிகை தமன்னா தொடர்ந்து ஐட்டம் பாடல்களில் நடிக்க துவங்கினார். அதற்கு பிறகு தமன்னாவிற்கு சினிமாவில் அது ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. இந்த நிலையில் ஹிந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

தற்சமயம் அவருக்கு நடந்த விஷயம் ஒன்றை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் தமன்னா. அதில் அவர் கூறும்போது ஒரு படத்தில் நடிக்கும்போது நான் கேரவனிலேயே அழுதுவிட்டேன். அப்போது நான் மஸ்காரா போட்டிருந்ததால் கண்ணீர் வராமல் பார்த்துக்கொண்டேன் என கூறிய தமன்னா அது என்ன படம் என கூறவில்லை.

இந்த நிலையில் இதுக்குறித்து நெட்டிசன்கள் மத்தியில் ஒரு பேச்சு இருந்து வருகிறது. அதாவது ஒரு திரைப்படத்தில் தமன்னாவை நடிகையாக நடிக்க வைப்பதாக கூறி அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். ஆனால் அவருக்கு படத்தில் ஒரு சில காட்சிகளையும் ஒரு ஐட்டம் பாடல்களையும் மட்டுமே வைத்துள்ளனர்.

அந்த படத்தில்தான் தமன்னா இப்படி அழுதுள்ளார் என கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

To Top