Tamil Cinema News
அந்த ஹீரோவுக்கு எல்லையில்லாமல் முத்தம் கொடுக்க ரெடி.. ஓப்பனாக கூறிய தமன்னா..!
தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தமன்னா. சினிமாவில் பல வருடங்களாகவே தனக்கென தனி இடத்தை பிடித்து நடித்து வருகிறார் தமன்னா.
ஆரம்பத்தில் கல்லூரி கேடி மாதிரியான படங்களில் பெரிதாக கவர்ச்சி இல்லாமல்தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு அவரது படங்களில் எல்லையில்லாத கவர்ச்சியை பார்க்க முடிந்தது.
அதிலும் இப்போது அவரது கவர்ச்சியின் அளவு இன்னமுமே அதிகரித்துள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு மோசமான கவர்ச்சியில் இறங்கி ரசிகர்கள் மத்தியில் அவர் வரவேற்பை பெற்று வருகிறார். சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
தமன்னாவின் விருப்பம்:
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டார் தமன்னா. அதில் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கெல்லாம் தமன்னாவும் பதிலளித்து வந்தார்.
அப்படி பதிலளித்து வரும்போது அவரிடம் பிரபாஸ், ஹிருத்திக் ரோஷன், விஜய் தேவரக்கொண்டா இவர்கள் மூன்று பேரில் யாரோடு நடித்தால் லிப்லாக் காட்சியில் நடிப்பீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த தமன்னா, பிரபாஸ், ஹிருத்திக் ரோஷன் இருவருமே அனுபவம் வாய்ந்த நடிகர்கள். எனவே முத்தம் தர வேண்டும் என்றால் விஜய் தேவரக்கொண்டாவுக்குதான் தருவேன் என கூறியுள்ளார் தமன்னா.