Cinema History
தனி ஒருவன் 2 வில்லன் யாருன்னு சொல்லவா!.. ஜெயம் ரவிக்கு அண்ணன் வைத்த ட்விஸ்ட்!..
ஜெயம் ரவி நடித்த திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக தனி ஒருவன் திரைப்படம் இருக்கிறது. பொதுவாக கதாநாயகனுக்கு பெரிதாக மாஸ் காட்டி திரைப்படங்கள் வருவதை பார்க்கலாம்.
ஆனால் தனி ஒருவன் திரைப்படத்தில் கதாநாயகனை விடவும் வில்லன் கதாபாத்திரமான சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம்தான் அதிக மாஸான கதாபாத்திரமாக இருக்கும். அப்படியான ஒரு பெரிய வில்லனையே கதாநாயகன் எப்படி தோற்கடிக்கிறான் என்பதே கதையாக இருந்ததால் மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையாக அது அமைந்திருந்தது.
அதற்கு பிறகு அவர்கள் இணைந்து போகன் மாதிரியான படங்களில் நடித்தாலும் தனி ஒருவன் பெற்ற வரவேற்பை அந்த திரைப்படங்கள் பெறவில்லை. இந்த நிலையில் படத்தின் இயக்குனரும், ஜெயம் ரவியின் அண்ணனுமான இயக்குனர் மோகன் ராஜா தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுக்குறித்த ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது ஏ.ஜி.எஸ் நிறுவனம். அதில் நீ யாரென்று சொல், உன் எதிரி யாரென்று சொல்கிறேன். என படத்தில் வரும் வார்த்தையை மாற்றி அமைத்து ஒரு ப்ரோமோவை தயாரித்திருந்தனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் படத்தின் வில்லன் யார் என்பதை இன்னும் கூறவில்லை. சித்தார்த் அபிமன்யு கொடுத்த பெண்ட்ரைவ் ஆதாரங்களை கொண்டு அதில் வலிமைமிக்க வில்லனை மித்ரன் தேர்ந்தெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக வில்லனே அவரை தேடி வருவார் என கூறி ப்ரோமோவை முடித்துள்ளனர்.
