Connect with us

ஏழை வீட்டு பையன்னா எளக்காறமா போச்சா!.. கூல் சுரேஷை டார்கெட் செய்யும் ஹவுஸ் மேட்ஸ்!..

cool suresh bigg boss

Bigg Boss Tamil

ஏழை வீட்டு பையன்னா எளக்காறமா போச்சா!.. கூல் சுரேஷை டார்கெட் செய்யும் ஹவுஸ் மேட்ஸ்!..

Social Media Bar

எப்போதும் செல்கிற அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த முறை சுறுசுறுப்பாக செல்லவில்லை என்று ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் உலாவி வருகிறது. மற்ற பிக் பாஸ் சீசன்களை விட தற்சமயம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஏழாவது சீசன் அவ்வளவாக சுவாரஸ்யமாக இல்லை என்று பேசப்படுகிறது.

இருந்தும் அதில் உள்ள சில போட்டியாளர்கள் அதை கொஞ்சம் சுவாரசியமாக எடுத்துச் சென்று கொண்டுள்ளனர். அதில் முக்கியமானவர் கூல் சுரேஷ். கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது முதலே கேளிக்கையான விஷயங்களை செய்து தினசரி போட்டிகளை சுவாரசியமாக்கி வருகிறார்.

இந்த நிலையில் இன்று பிக் பாஸில் புதிதாக ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது அதாவது சாப கல் என்கிற ஒரு கல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கல் யாரிடம் செல்கிறதோ அவர்கள் அடுத்த வாரம் நேரடியாக எலிமினேஷனிற்கு நாமினேட் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த கல்லிற்காக வீட்டில் இருப்பவர்கள் இணைந்து ஒருவரை நாமினிட் செய்யலாம் என்று கூறப்பட்டது. அதன்படி வீட்டில் உள்ள முக்கால்வாசி பேர் கூல் சுரேஷை கூறினர். ஆனால் கூல் சுரேஷ் யாரிடமும் எந்த பிரச்சனையும் செய்து கொள்ளவில்லை என்ற பொழுதும் எதற்கு அனைவரும் கூல் சுரேஷை கூறுகின்றனர் என்கிற கேள்வி எழுந்தது. இதனால் கூல் சுரேஷ் கடும் கோபத்திற்கு உள்ளானார்.

இந்த நிலையில் நேற்று ஒவ்வொருவரும் அவர்களுக்கு சொந்தக் கதையை சொல்வதற்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் கூல் சுரேஷ் பால்ய வயது முதல் அவர் பட்ட கஷ்டங்களை கூறியிருந்தார். பிக் பாஸ் வீட்டிலேயே அவர் அளவுக்கு ஏழ்மையான நபர்கள் கிடையாது. இதனால் மக்கள் மத்தியில் ஈசியாக கூல் சுரேஷ் இடம்பிடித்து விடுவார் என்பதற்காக அவரை வெளியேற்ற நினைக்கிறார்களா போட்டியாளர்கள் என்று பேச்சுக்கள் மக்கள் மத்தியில் அடிபடுகின்றன.

Articles

parle g
madampatty rangaraj
To Top