Connect with us

மோகன் படம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க!.. சம்பளமும் கொடுக்கல.. ஏமாந்த லொள்ளு சபா மனோகர்!..

lollu sabha manohar actor mohan

Cinema History

மோகன் படம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க!.. சம்பளமும் கொடுக்கல.. ஏமாந்த லொள்ளு சபா மனோகர்!..

Social Media Bar

விஜய் டிவி மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரபலங்கள் பலர் சிவகார்த்திகேயன் துவங்கி சந்தானம் வரை பலர் விஜய் டிவி மூலமாகதான் வெள்ளி திரைக்கு வந்தனர்.

அப்படி வந்தவர்களில் நடிகர் லொள்ளு சபா மனோகரனும் முக்கியமானவர். இந்த லொள்ளு சபா நிகழ்ச்சி பிரபலமான பிறகு அதில் நடித்த முக்கால்வாசி பேர் சினிமாவிற்கு காமெடியனாக வந்தனர். அதில் லொள்ளு சபா மனோகரனும் ஒருவர். லொள்ளு சபா மனோகருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல பிரச்சினைகள் நடந்து வந்துள்ளன.

சம்பள விஷயத்திலேயே நிறைய ஏமாந்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சம்பளத்தை பொருத்தவரை 3000, 4000 என்கிற ரீதியில்தான் அவருக்கு சம்பளமே கிடைத்துள்ளன. மேலும் ஒரு படத்தை தயாரிப்பதற்காக தயாரிப்பாளர் ஒருவர் இவரிடம் காசு வாங்கியும் இவரை ஏமாற்றி உள்ளார்.

சமீபத்தில் கூட மோகன் நடிக்கும் திரைப்படம் ஒன்றிற்கு காமெடி காட்சிக்கு ஆள் வேண்டும் என்று கூறி லொள்ளு சபா மனோகரனை அழைத்துச் சென்று அங்கு நடிக்க வைத்துவிட்டு ஒரு ரூபாய் கூட காசு தராமல் திரும்ப அனுப்பி இருக்கிறார்கள். கேட்டால் மோகன் படத்தில் உங்களை நடிக்க வைத்திருக்கிறோம் அதுவே பெரிது என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து லொள்ளு சபா மனோகரன் கூறும் பொழுது தற்சமயம் வரும் இயக்குனர்கள் பலரும் இந்த மாதிரி நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்.

To Top