ராஜாவுக்கு வராத கூட்டம் ரஹ்மானுக்கு குவிந்தது! வேதனையில் இசைஞானி!

தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளவர் இளையராஜா. எத்தனையோ புதிய இளம் இசையமைப்பாளர்கள் வந்தாலும் தொடர்ந்து இயங்கி வருபவர் இளையராஜா.

சினிமாவுக்கு இசையமைப்பது தவிர அவ்வபோது பல்வேறு நாடுகளில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அவ்வாறாக துபாயில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்த இளையராஜா திட்டமிட்டிருந்தார். அதற்கான விளம்பரங்கள் வெளியான நிலையில் டிக்கெட் விற்பனைகளும் தொடங்கியது.

பொதுவாக இளையராஜா இசை நிகழ்ச்சி என்றாலே கூட்டம் குவிந்து விடுவது வழக்கம். ஆனால் பேரதிர்ச்சியாக இந்த தடவை டிக்கெட்டுகள் அதிகம் விற்பனையே ஆகவில்லையாம். நிகழ்ச்சிக்கு சில நாட்களே உள்ள நிலையிலும் டிக்கெட்டுகள் விற்பனையாகததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்களாம்.

அதே துபாயில் கடந்த சில நாட்கள் முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் கூட்டம் களைகட்டியுள்ளது. இளையராஜா நிகழ்ச்சியை விட ரஹ்மான் நிகழ்ச்சிக்கு டிக்கெட் விலை அதிகமாக இருந்தும் கூட பலரும் அந்த இசை நிகழ்ச்சியில் கூடியதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh