Cinema History
இந்த ஒரு கருவியை வச்சிதான் மியூசிக் போடணும்… ஜேசுதாசுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர்!..
சினிமாவில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர்கள் பலரும் சினிமாவிற்கு வந்தப்போது சில கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள். யாருக்கும் எளிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. இளையராஜாவெல்லாம் ஆரம்பத்தில் சாலை ஓரங்களில் நின்று பாடல் பாடுவாராம்.
இசையமைப்பாளர் ஜேசுதாஸும் தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராவார். மற்ற இசையமைப்பாளர்களை போலவே இவரும் கஷ்டப்பட்டுதான் சினிமாவிற்கு வந்தார். இதுவரை 1000க்கும் அதிகமாக திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
ஜேசுதாஸை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வீணை பாலச்சந்தர். 1964 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் பொம்மை என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்குதான் ஜேசுதாஸ் முதன்முதலாக இசையமைத்தார். படத்தில் வாய்ப்பு கிடைத்துவிட்டது என்றதுமே மிகவும் மகிழ்ச்சியாக ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளார் ஜேசுதாஸ்.

அங்கே ஏற்கனவே பாலச்சந்தர் வந்திருந்தார். அவருக்கு இசையில் அதிக ஞானம் உண்டு. எனவே ஜேசுதாஸை அழைத்து அவரிடம் ஒரு புல் புல்தாராவை மட்டும் கொடுத்து இதை வைத்துதான் பாடலுக்கு இசையமைக்க போகிறோம் என கூறியுள்ளார் பாலச்சந்தர்.
இதை கேட்டதும் ஜேசுதாஸுக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது. எப்படி ஒரே ஒரு இசைக்கருவியை வைத்து இசையமைக்க முடியும் என அவர் யோசித்துள்ளார். இப்படியாக ஒரே ஒரு இசைக்கருவியை வைத்து நீயும் பொம்மை நானும் பொம்மை என்கிற பாடல் உருவாகியது.
கடைசியில் அந்த படத்திலேயே அந்த பாடல்தான் பெரும் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு ஜேசுதாஸ் பெரும் உயரங்களை தொடவும் அந்த பாடல் காரணமாக அமைந்தது.
