தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாவதற்கு முன்பு வரை பெரிதாக வெற்றி பெறுமா? என்கிற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும் ஆனால் படம் வெளியான பிறகு பெரிய வெற்றியை கொடுத்து விடும்.
இதனால் விநியோகஸ்தர்களுக்கு திரைப்படம் வாங்குவது என்பது ஒரு கடினமான வேலையாகும். அந்த திரைப்படம் வெற்றியடையுமா இல்லையா என்று அவர்களுக்கு தெரியாது. படத்தை பார்த்துவிட்டு மட்டும் படம் நன்றாக இருக்கிறது என்று தோன்றினால் வாங்கி விடுவார்கள்.
இப்படியாக விநியோகஸ்தர் ரவீந்திரன் ஒரு படத்தை வாங்கினார் விஜய் சேதுபதியும் மாதவனும் சேர்ந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம்தான் அது. விக்ரம் வேதா திரைப்படத்தை வாங்கிய போது அந்த திரைப்படம் பெரிதாக வெற்றி அடையுமா என்பது அவருக்கு சந்தேகமாகவே இருந்தது.

னெனில் அப்போது விஜய் சேதுபதி இந்த அளவிற்கு பிரபலமாகவில்லை எனவே அந்த திரைப்படத்தை ஒருமுறை பார்த்தார் ரவீந்திரன். அவருக்கு அப்பொழுதும் படம் நன்றாக ஓடும் என்கிற நம்பிக்கை வரவில்லை. எனவே அவருக்குத் தெரிந்த இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு ஒரு ப்ரிவீவ் ஷோவை போட்டு காண்பித்தார்.
அதை பார்த்த இளைஞர்கள் வெளியே வந்து ரவீந்திரனை திட்டினார்கள். இந்த படத்தை வைத்துக்கொண்டா பயந்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த படம் நிஜமாக நல்ல வெற்றியை கொடுக்கும் என்று இளைஞர்கள் கூறினர்.
சரி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது என்று அவர் மற்ற விநியோகஸ்தர்களிடம் சென்ற பொழுது யாருமே அந்த படத்தை வாங்க தயாராக இல்லை. இருந்தாலும் ஒரு மன நம்பிக்கையில் அந்த படத்தை தானே ரிலீஸ் செய்தார் ரவீந்திரன். ஆனால் அவர் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது விக்ரம் வேதா திரைப்படம்.






