அன்னைக்கு இமான் வீட்டில் ஸ்ரீ திவ்யா செய்த வேலைதான் அவருக்கு பட வாய்ப்பே போயிட்டு!.. உண்மையை கூறிய பத்திரிக்கையாளர்!..
Actress sri divya: வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற ஒரு திரைப்படம் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா. ஸ்ரீ திவ்யாவிற்கு அப்போது எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தனர். அதனை தொடர்ந்து ஸ்ரீ திவ்யாவிற்கும் அதிகமாக வாய்ப்புகள் வர துவங்கின.
முக்கியமாக அப்போது சினிமாவில் இளம் நடிகர்களாக வலம் வந்த விஷ்ணு விஷால், அதர்வா போன்ற நடிகர்களுடன் தொடர்ந்து சேர்ந்து நடித்து வந்தார் ஸ்ரீ திவ்யா. இதற்கு நடுவே சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கிச்சட்டை என்கிற திரைப்படத்திலும் ஜோடியாக நடித்தார். இந்த ஜோடிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் அதற்கு பிறகு ஸ்ரீ திவ்யாவிற்கு வாய்ப்பு என்பது குறைய துவங்கியது. தற்சமயம் பெரிதாக வாய்ப்புகளே இல்லாமல் இருக்கும் ஸ்ரீதிவ்யா மீண்டும் மெய்யழகன் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை 90 படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் இயக்குகிறார்.
ஸ்ரீ திவ்யா செய்த தவறு:
இது கண்டிப்பாக ஸ்ரீ திவ்யாவிற்கு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏன் தொடர்ந்து ஸ்ரீ திவ்யாவிற்கு வாய்ப்பு இல்லாமல் போனது என பார்க்கும்போது அதுக்குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

ரஜினி முருகன் திரைப்படத்திலேயே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யாதான் நடிக்க இருந்தாராம். ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் போது அவருக்கு இசையமைப்பாளர் இமானுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இமான் வீடு கட்டியப்போது அதன் கிரஹபிரவேசத்திற்கு நடிகை ஸ்ரீ திவ்யாவையும் அழைத்திருக்கிறார். அங்கு சென்ற ஸ்ரீ திவ்யா மது அருந்துவிட்டு பயங்கரமாக ஆடியிருக்கிறார். இந்த நிலையில் அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனதை அடுத்துதான் ஸ்ரீ திவ்யாவிற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போயின என்கிறார் செய்யாறு பாலு.