Connect with us

அயலான் படத்தில் ஏலியனா நடிச்சது யார் தெரியுமா? இந்த நடிகர்தான்!..

News

அயலான் படத்தில் ஏலியனா நடிச்சது யார் தெரியுமா? இந்த நடிகர்தான்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்பது மிகவும் குறைவாகவே வந்து கொண்டிருக்கின்றன. ஹாலிவுட் மாதிரியான பெரிய சினிமாக்களே வருடத்திற்கு நிறைய குழந்தைகளுக்கான படங்களை எடுக்கின்றனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் அவ்வளவாக குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எடுக்கப்படாத காரணத்தினால் அவர்கள் பெரியவர்கள் பார்க்கும் திரைப்படங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த நிலையில் குழந்தைகளுக்கான ஒரு நட்சத்திரமாக தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

அதனால் அவரது படங்களில் கவர்ச்சி காட்சிகளை கூட சிவகார்த்திகேயன் முழுவதுமாக ஒதுக்கி வைத்துள்ளார். இந்த நிலையில் சிறுவர்களுக்காக அவரே தயாரித்து நடிக்கும் திரைப்படம் அயலான். ஏலியனை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் பல வருடமாக எடுக்கப்பட்டு வந்தது.

தற்சமயம் இந்த திரைப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிடப் போவதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஏலியன் கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரமாகும். அந்த ஏலியனாக நடிகர் வெங்கட் செங்குட்டுவன் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

வெங்கட் செங்குட்டுவன் ஏற்கனவே காம்ப்ளக்ஸ் என்னும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்சமயம் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் படம் முழுக்க அவர் ஏலியன் கதாபாத்திரமாக நடித்திருப்பதால் அவர்தான் படத்தில் நடித்துள்ளார் என்பதை பலருக்கும் தெரியவில்லை.

To Top