News
த்ரிஷாவிற்கு பொங்குற நீங்க விசித்திராவை மட்டும் கண்டுக்கவே இல்லையே!. எல்லாம் பயம்தான்.. கலாய்க்கும் ரசிகர்கள்!.
Trisha mansoor alikhan issue : கடந்த சில நாட்களாக த்ரிஷா மற்றும் மன்சூர் அலிக்கான்தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் பெயர்களாக இருக்கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மன்சூர் அலிக்கான் ஒரு பத்திரிக்கை பேட்டியில் பேசிய விஷயங்கள் சர்ச்சையாகி இருந்தது.
முன்பெல்லாம் வில்லன் நடிகர்களுக்கு நடிகைகளுடன் படுக்கையறை காட்சிகள் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் நடிகையை கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறார்கள். லியோ படத்தின் படப்பிடிப்பிலேயே த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை என புலம்பியிருந்தார் மன்சூர் அலிக்கான்.
இதனையடுத்து த்ரிஷா கோபமாகி ஒரு பதிவை போட அவருக்கு துணையாக தென்னிந்திய சினிமாவே வந்துவிட்டது என கூறலாம். இயக்குனர் லோகேஷ் கனகராஜில் துவங்கி, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி என பலரும் திரிஷாவிற்கு ஆதரவு பதிவு போட துவங்கினர்.

இந்த நிலையில் நேற்று த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் மன்சூர் அலிக்கான். ஆனால் அதே சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை விசித்திரா ஒரு தெலுங்கு திரைப்படத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் அதனால் சினிமாவை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.
அந்த நடிகர் தெலுங்கில் பிரபலமான நடிகரான பாலகிருஷ்ணாதான் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் த்ரிஷாவை குறித்து பேசியதற்கே ஒன்று திரண்ட இந்த பிரபலங்கள் குழு, இப்போது விசித்திராவிற்காக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.

இதுக்குறித்து நெட்டிசன்கள் பேசும்போது மன்சூர் அலிக்கான் என்பதால் எளிதாக டார்கெட் செய்து அடித்துவிட்டனர். பாலகிருஷ்ணா பெரும் அரசியல் பின்புலம் உள்ளவர். அவரிடம் இவர்கள் வம்பு வைத்துகொள்ள மாட்டார்கள், த்ரிஷா மாதிரியான பெரும் நடிகைகளுக்குதான் இவர்கள் குரல் கொடுப்பார்கள் என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்
