லியோ ஆயிரம் கோடிக்கெல்லாம் ஓடாது!.. படத்தோட தயாரிப்பாளரே இப்படி சொல்லிட்டாரே!..
எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்து தற்சமயம் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் திரைப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் லலித் சில சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
படத்தை முதல் நாள் சென்று பார்த்த ரஜினிகாந்த் படம் குறித்து நல்ல விஷயங்களை கூறினார் முக்கியமாக படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதை ரஜினிகாந்த் அறிந்துகொண்டு லலித்திற்கு போன் செய்து அதற்காக வாழ்த்தும் கூறியுள்ளார்.
ஏனெனில் படம் எடுக்கப்பட்டதை விட அதிகமான வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யுமா? என்று லலித்திடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லலித் கண்டிப்பாக இந்த படம் ஆயிரம் கோடி வசூல் செய்யாது.

ஏனெனில் நாங்கள் வட இந்தியாவை மையப்படுத்தி திரைப்படத்தை வெளியிடவில்லை. வட இந்தியாவில் பெரிதாக விளம்பரமும் செய்யவில்லை. அதேபோல நாங்கள் ஏற்கனவே திரைப்படத்தை ஒ.டி.டி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு படத்தை விற்றுவிட்டோம்.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து அவர்கள் ஓ.டி.டியில் வெளியிட்டு விடுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் வட இந்தியாவில் இருக்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு விருப்பமில்லை. அவர்கள் ஒரு மாதத்தில் ஓடிடியில் வெளியாக போகும் படத்தை திரையரங்கில் வெளியிட முடியாது என்று கூறி விட்டார்கள்.
எனவே வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் லியோ பணத்தை வெளியிட முடியவில்லை. எனவே கண்டிப்பாக இந்த படம் ஆயிரம் கோடி வசூல் செய்வது கடினம்தான் என்றாலும் இது வசூல் செய்யும் தொகையே எங்களுக்கு வெற்றி தான் என்று கூறியுள்ளார்
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 125 கோடி கொடுத்து இந்த படத்தை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சன் டிவி நிறுவனம் படத்திற்கான சேட்டிலைட் உரிமத்தை 80 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மொத்த படத்தின் பட்ஜெட்டே 250 கோடி என்றுதான் கூறப்படுகிறது. இருந்தாலும் தயாரிப்பாளரே ஆயிரம் கோடிக்கு படம் ஓடாது என கூறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.