Connect with us

இலங்கைல கால் வைக்க முடியுமான்னே தெரியல!.. விஜய் மீது கோபத்தில் இருக்கும் இலங்கை மக்கள்!..

vijay GOAT

News

இலங்கைல கால் வைக்க முடியுமான்னே தெரியல!.. விஜய் மீது கோபத்தில் இருக்கும் இலங்கை மக்கள்!..

Social Media Bar

Vijay GOAT Movie Shoot : லியோ திரைப்படத்திற்கு பிறகு விஜய் அடுத்த நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்த படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது ஏனெனில் இந்தத் திரைப்படம் டைம் டிராவல் திரைப்படம் என்று கூறப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல கோட் திரைப்படத்தின் போஸ்டரிலும் இரண்டு விஜய் இருப்பதை பார்க்க முடிந்தது.

மேலும் விஜய் இந்த திரைப்படத்தில் ராணுவத்தில் இருக்கிறார் என்பதும் தெரிகிறது. இதில் நடிகர் பிரசாந்த், பிரபு தேவா மாதிரியான முக்கிய நடிகர்கள் விஜய்க்கு நண்பர்களாக நடித்துள்ளனர்.

GOAT new poster
GOAT new poster

இந்த திரைப்படம் எந்த காலகட்டத்தில் நடக்கும் கதை என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்புகள் இலங்கையில் எடுக்கப்பட உள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இயக்குனர் வெங்கட் பிரபுவும் இதற்காக இலங்கை சென்று படப்பிடிப்பு தளங்களை பார்வையிட்டு வந்திருக்கிறார். ஆனால் ஈழத் தமிழர் பிரச்சினை இருந்த காலகட்டத்தில் விஜய் இலங்கை குறித்து சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பேசி இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வீடியோக்கள் அனைத்தும் இப்போது இலங்கையில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் இலங்கைக்கு வருவதை அறிந்து இந்த வீடியோவை அங்கு பரப்பி இருக்கின்றனர் இதனால் விஜய் தொடர்பாக அங்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எனவே விஜய் இலங்கைக்கு செல்வதே பாதுகாப்பானதா என்கிற கேள்வி தற்சமயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top