Connect with us

இந்தியாவிலேயே முதன் முதலாக அரசியலுக்கு வந்த நடிகர் தமிழனா?… ஆனால் எம்.ஜி.ஆர் கிடையாது!..

SSR MGR

Cinema History

இந்தியாவிலேயே முதன் முதலாக அரசியலுக்கு வந்த நடிகர் தமிழனா?… ஆனால் எம்.ஜி.ஆர் கிடையாது!..

Social Media Bar

Tamil cinema :  உலகம் முழுக்கவே சினிமாவிற்கும் அரசியலுக்கும் இடையே நல்ல நெருங்கிய தொடர்புண்டு. அரசியலில் ஒருவர் பிரபலமாவதற்கு முதலில் அவரை மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் பாமர மக்கள் வரை தெரிந்த ஒரு நபராக இருக்கும் பட்சத்தில் மக்கள் நம்பி அவருக்கு ஓட்டு போடுவார்கள்.

இதனாலேயே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்தப்போது அது அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்தது என கூறலாம். அமெரிக்காவில் ரொனால்ட் ரீகனில் துவங்கி, ஆந்திர பிரதேசத்தில் என்.டி ராமா ராவ், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் என பலரும் முதலமைச்சர் ஆனதற்கு பின்னால் இருந்த ஒரே காரணம் அவர்கள் எல்லாம் நடிகர்கள் என்பதுதான்.

இந்திய அரசியலை பொறுத்தவரை அதில் முதன் முதலாக காலடி தடத்தை பதித்த நடிகர் ஒரு தமிழ் நடிகர் என்பது ஆச்சரியமான தகவலாகும். ஆம் இந்தியாவில் முதன் முதலாக அரசியலுக்கு வந்த நடிகர் என்றால் அது எஸ்.எஸ் ராஜேந்திரன் அவர்கள்தான்.

அவருக்கு பிறகுதான் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் எல்லோருமே அரசியலுக்குள் வந்தனர். அவர்களுக்கெல்லாம் முன்பே திமுகவில் முக்கியமான பொறுப்பில் இருந்தார் எஸ்.எஸ்.ஆர். எனவே இப்போது வரை இந்தியாவில் முதன் முதலாக அரசியலுக்கு வந்த நடிகர் என்கிற சாதனையை எஸ்.எஸ்.ஆர் பெற்றுள்ளார்.

To Top