என்னோட முதல் ரசிகை ஒரு ஒன்பது வயது பெண்தான்!.. ரஜினிகாந்தை அடையாளம் கண்டுக்கொண்ட சிறுமி!..

Actor Rajinikanth : ரஜினிகாந்த் ஆரம்பகட்டத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது பாலச்சந்திரிடம் திட்டு வாங்குவது அவருக்கு தினசரி வேலையாக இருந்தது. ஏனெனில் சினிமாவிற்கு வந்த போது ரஜினிக்கு தமிழில் பேச வரவில்லை முதலில் தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் சினிமாவிற்கு வரவில்லை.

அவர் கன்னட நடிகரான ராஜ்குமாரின் பெரும் ரசிகராக இருந்தார். ரஜினிகாந்த் அவரை போலவே கன்னடத்தில் பெரும் நடிகராக வேண்டும் என்பதற்காக கன்னட பிலிம் இன்ஸ்டிட்யூட்டியில்தான் நடிப்பை கற்க தொடங்கினார். ஆனால் அங்கு ஒரு விஷயமாக வந்த பாலச்சந்தருக்கு ரஜினிகாந்தின் நடிப்பு பிடித்துப் போகவே அவரை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார்.

rajinikanth
rajinikanth
Social Media Bar

பாலச்சந்தர் தமிழில் பேசுவது என்பதே கடினமாக இருந்த காரணத்தினால் முதல் படத்தின் போதே வாழ்க்கையை வெறுத்து விட்டார் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வராகங்கள் திரைப்படத்தில் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தை ரஜினிக்கு கொடுத்தப்போது அதில் தமிழில் பேசுவது என்பதுதான் அவருக்கு மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது.

இருந்தாலும் கே.பாலச்சந்தரின் திட்டுகளுக்கு நடுவே அந்த திரைப்படத்தில் நடித்து முடித்தார் ரஜினிகாந்த். அதன் பிறகு திரைப்படம் வெளியான பொழுது மிகவும் கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி படத்திற்கு சென்றார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அப்பொழுது தாடி இல்லாமல் இருந்ததால் அவரை யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. திரைப்படத்தில் உட்கார்ந்து அவர் படத்தை பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவருக்கு அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு சிறுமி அந்த திரைப்படத்தில் நடித்திருப்பதே நீங்கள் தானே அங்கிள் என கேட்டது.

அந்த சிறுமிதான் என்னுடைய முதல் ரசிகை என்று ஒரு பேட்டியில் ரஜினி கூறியிருக்கிறார். ஏனெனில் அந்த மொத்த திரையரங்குகளில் இருந்த வேறு யாருமே ரஜினிகாந்தை அடையாளம் கண்டு கொள்ளாத போது அந்த ஒரு  சிறுமி மட்டும் அடையாளம் கண்டு கொண்டது அவருக்கே வியப்பாக இருந்தது என்று கூறுகிறார் ரஜினிகாந்த்.