விஜய் சேதுபதி படத்தை பார்த்து கதறி அழுத பெண்!.. ஆறுதல் கூறிய இயக்குனர்!..

தமிழ் சினிமா நடிகர்களில் வில்லன் ஹீரோ என இரு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க கூடியவர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடித்த பல திரைப்படங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்துள்ளன.

அப்படி அவர் நடித்த ஒரு திரைப்படம்தான் 96. இந்த படம் தமிழில் ஹிட் கொடுத்ததை அடுத்து தெலுங்கு மொழியிலும் அதை ரீமேக் செய்தனர். ப்ரேம்குமார் சந்திரன் என்னும் இயக்குனர் இந்த படத்தை எடுத்திருந்தார். ஸ்கூலில் படித்த நண்பர்கள் எல்லாம் 10 வருடங்களுக்கு பிறகு ரீ யூனியனில் சந்திக்கும்போது கதாநாயகனுக்கு ஏற்பட்ட பள்ளி காதலை வைத்து திரைப்படம் செல்கிறது.

Social Media Bar

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 90ஸ் கிட்ஸ்களின் காதல் கதையை பேசும் விதமாக இருந்ததால் வெகுவான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் இயக்குனரான ப்ரேம்குமார் படம் குறித்து சில சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்திருந்தார்.

படம் வெளியான சில நாட்கள் கழித்து திரையரங்கிற்கு படத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார் இயக்குனர். அப்போது அவருக்கு அருகில் இருந்த பெண் ஒருவர் பாதி படம் ஓடிய பிறகு கண்ணீர் விட்டு அழ துவங்கிவிட்டார்.

பிறகு படம் முடியும் வரை அழுதுக்கொண்டே இருந்தாராம். படம் முடியும்போதுதான் படத்தின் இயக்குனர் அருகில் அமர்ந்துள்ளார் என அவருக்கு தெரிந்துள்ளது. உடனே இயக்குனரை பார்த்து என் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே படமாக்கி இருக்கீங்க என கூறிவிட்டு சென்றுள்ளார்.