Latest News
ட்ரெண்டாகும் வீரப்பன் வெப் சீரிஸ் – வீரப்பன் மனைவி கூறிய மறைக்கப்பட்ட உண்மைகள்!..
இந்திய வரலாற்றிலேயே இரண்டு அரசுகளை ஆட்டம் காண வைத்த மிகப்பெரும் கடத்தல் மாஃபியாவாக இருந்தவர் வீரப்பன். கர்நாடகா, தமிழ்நாடு என இரண்டு அரசுகளும் முயன்றும் கூட வீரப்பனை பிடிப்பது என்பது அரசுக்கே கடினமான காரியமாகதான் இருந்தது. சத்யமங்கலம் காட்டை தனக்கான பாதுக்காப்பு கோட்டையாக வீரப்பன் மாற்றியதே இதற்கு காரணமாக இருந்தது.
சந்தன மரங்களை கடத்துதல், யானைகளை கொன்று அவற்றின் தந்தங்களை கடத்துதல் போன்றவை வீரப்பன் செய்த முக்கிய குற்றங்களாக இருந்தன. ஆனால் அவர் காவல் அதிகாரிகளையும், வனத்துறை அதிகாரிகளையும் கொலை செய்ய துவங்கிய பிறகே அவர் மீது அரசு அதிக கவனம் செலுத்த துவங்கியது.
பொதுவாக வீரப்பன் பற்றி எந்த ஒரு படமோ, புத்தகமோ அல்லது தொடரோ வந்தாலும் அதில் வீரப்பனை நல்லவனாக அல்லது கெட்டவனாக காண்பிப்பது உண்டு. மக்கள் தொலைக்காட்சியில் ஏற்கனவே வீரப்பன் கதையை அடிப்படையாக கொண்டு சந்தன காடு என்கிற தொடர் வந்தது. ஆனால் அதில் வீரப்பனை நல்லவராக முன்னிலைப்படுத்தி அந்த தொடரை எடுத்திருந்தனர்.
ஆனால் தற்சமயம் நெட்ப்ளிக்ஸ் வீரப்பன் குறித்து எடுத்திருக்கும் ஆவணப்படம் மேலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வீரப்பனின் இரு முகத்தையும் காண்பிப்பதாக இந்த தொடர் உள்ளது. முக்கியமாக வீரப்பனின் படையில் இருந்தவர்கள், வீரப்பனின் மனைவி மற்றும் அப்போது பணியில் இருந்த வனத்துறை அதிகாரிகள் போன்ற முக்கிய நபர்களிடம் இருந்து ஆதாரங்களை திரட்டி இந்த ஆவண படத்தை தயார் செய்துள்ளனர்.
வீரப்பனின் வளர்ச்சி துவங்கி வீழ்ச்சி வரை பேசும் இந்த தொடர் தமிழில் வந்த முக்கியமான ஆவணத்தொடராகும்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்