Cinema History
நடக்க போவதை முன்பே காட்டிய திரைப்படம்!.. கேப்டன் பிரபகாரன் படத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம்!..
Vijayakanth: விஜயகாந்த் நடிப்பில் தமிழில் பல படங்கள் ஹிட் படங்களாக அமைந்துள்ளன. அதில் முக்கியமான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தை பொறுத்தவரை அவர் அவரால் முடிந்தவரை பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர்.
ஆக்ஷன் ஹீரோவாக வெற்றி படங்கள் கொடுத்த அதே காலக்கட்டத்தில்தான் அவர் வானத்தப்போல மாதிரியான திரைப்படங்களிலும் நடித்து வந்தார். விஜயகாந்த் நடிக்கும் போலீஸ் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது.
இதனையடுத்து விஜயகாந்த் தொடர்ந்து போலீசாக நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன். கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கியிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பெரும் அலையை கிளப்பிய படமாக கேப்டன் பிரபாகரன் இருந்தது.
இந்த படத்தின் காரணமாகதான் இவருக்கு கேப்டன் பிரபாகரன் என பெயர் வந்ததாகவும் பலர் கூறுவதுண்டு. இந்த படத்தில் வில்லன் மன்சூர் அலிக்கான் கதாபாத்திரம் கிட்டத்தட்ட சந்தன கடத்தல் வீரப்பனை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருந்தது.
சந்தன கடத்தல் வீரப்பன் செய்த பல விஷயங்கள் இந்த படத்தில் இருந்தது. அதில் வியப்பான ஒரு விஷயமும் இருந்தது. அது என்னவென்றால் சந்தனக்கடத்தல் வீரப்பன் 22 போலீஸாரை கொன்றது பலருக்கும் தெரியும். அந்த காட்சி கேப்டன் பிரபாகரன் படத்திலும் இருந்தது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகும்போது அந்த சம்பவமே நடக்கவில்லை. ஆம் கேப்டன் பிரபாகரன் படம் வெளியானது 1991 ஆம் ஆண்டில், ஆனால் குறிப்பிட்ட சம்பவம் நடந்தது 1993 இல், கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் காட்டப்பட்ட பிறகுதான் வீரப்பன் அதை செய்திருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்