Connect with us

சுந்தர் சி சொன்னது போலவே சந்தானம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு!.. வரிசையில் நின்ற தயாரிப்பாளர்!.

santhanam sundar c

News

சுந்தர் சி சொன்னது போலவே சந்தானம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு!.. வரிசையில் நின்ற தயாரிப்பாளர்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதில் உயரத்தை தொட்டவர் நடிகர் சந்தானம். சந்தானம் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவரது காமெடிக்காகவே ஓட துவங்கின.

இந்த நிலையில்தான் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களுக்கு உள்ளானார் சந்தானம். ஒரு சில திரைப்படங்களுக்கு வாய்ப்பு தருவதாக அழைத்து பிறகு எதுவும் இல்லை என்று அனுப்பிவிடுவார்கள்.

இப்படி இருக்கும்போது ஒரு நாள் சுந்தர் சி நடித்த குரு சிஷ்யன் திரைப்படத்தில் அவருடன் சுந்தர் சியும் நடித்து கொண்டிருந்தார். அப்போது காலையிலேயே சந்தானத்தை வர சொல்லிவிட்டு அவரை வைத்து படப்பிடிப்பே நடத்தாமல் இருந்தார் சந்தானம்.

அதை பார்த்த சுந்தர் சி இவரை இப்படி காக்க வைக்கிறீர்கள் ஒருநாள் இவரிடம் டேட் வாங்குவதற்கு கஷ்டப்படுவீர்கள் பாருங்கள் என இயக்குனரிடம் கூறியுள்ளார் சுந்தர் சி. அதே போல பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் சந்தானம் நடித்து வந்தார்.

அப்போது அவரிடம் தேதி வாங்குவதற்காக வெகு நாட்களாக காத்திருந்தார் அந்த பழைய பட இயக்குனர். பிறகு சந்தானம் ஒருமுறை சுந்தர் சியை சந்தித்த சந்தானம் சார் நீங்கள் சொன்ன மாதிரியே நடந்துடுச்சு என இந்த நிகழ்வை கூறியுள்ளார்.

To Top