News
24 வருஷமா எங்க போயிருந்தீங்க!.. திடீர்னு வந்த தயாரிப்பாளரை பார்த்து ஷாக்கான ரஜினிகாந்த்!..
தமிழில் புகழ்பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் ரஜினிகாந்த். கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த ரஜினிகாந்த் தொடர்ந்து இப்போது வரை இளம் நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் அவருக்கான அடையாள திரைப்படங்கள் என கூறலாம். அந்த திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களை விடவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.
அப்படி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் படையப்பா. படையப்பா திரைப்படம் தமிழ் மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் தயாரித்திருந்தார். 1999 இல் வெளியானது படையப்பா.

1996 இல் வெளியான இந்தியன் படம்தான் அதுவரை தமிழில் அதிக வசூல் படைத்த திரைப்படமாக இருந்தது. படையப்பா திரைப்படம் அந்த வசூலை ப்ரேக் செய்தது. இந்த நிலையில் படையப்பா திரைப்படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் தேனப்பனை ரஜினிகாந்த் பார்க்கவே இல்லை,
இந்த நிலையில் 24 வருடங்களுக்கு பிறகு தேனப்பன் தற்சமயம் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அவரை பார்த்த ரஜினிகாந்த் இவ்வளவு நாட்களாக எங்கு சென்றிருந்தீர்கள். உங்களை பார்க்கவே முடியவில்லையே என கேட்டுள்ளார். பிறகு தேனப்பன் பேசும்போது படையப்பா திரைப்படத்தை மறுவெளியீடு செய்வது தொடர்பாக ரஜினிகாந்தை சந்திக்க வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
விரைவில் படையப்பா திரைப்படத்தை நாம் திரையில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.
