Connect with us

நான் சொல்ற வரைக்கு கல்யாணம் பண்ணக்கூடாது… நயன்தாராவிற்கு ரூல்ஸ் போட்ட தயாரிப்பாளர்!..

nayanthara

Cinema History

நான் சொல்ற வரைக்கு கல்யாணம் பண்ணக்கூடாது… நயன்தாராவிற்கு ரூல்ஸ் போட்ட தயாரிப்பாளர்!..

Social Media Bar

Actress Nayanthara : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. நயன்தாராவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது என்ற காரணத்தாலையே அவருக்கு அதிக சம்பளம் கொடுத்து வருகின்றனர்.

மேலும் நயன்தாரா ஹீரோக்களுடன் ஹீரோயினாக நடிப்பதை விடவும் தனித்து ஒரு படத்தில் ஹீரோயினாக நடிப்பதையே விரும்புகிறார் தொடர்ந்து அந்த மாதிரியான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் ஆனால் அப்படி அவர் நடித்த திரைப்படத்தில் அறம் திரைப்படம் மட்டும் தான் பெருமளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

மற்ற திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை தற்சமயம் வெளியான அன்னபூரணி திரைப்படம் கூட பெரும் தோல்வியை கண்டுள்ளது இந்த நிலையில் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் தயாராகிக் கொண்டிருந்த பொழுது நடிப்புக்காக நயன்தாராவிடம் அக்ரிமெண்ட் போடும்போது அதில் தயாரிப்பாளர் நயன்தாரா இந்த திரைப்படம் முடியும் வரையில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஒரு விதிமுறையை போட்டிருந்தார்.

இது என்ன புது விதி முறையாய் இருக்கிறதே என்று பார்க்கும் பொழுது தமிழ் சினிமாவில் அதற்கு தகுந்த சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. மல்லுவேட்டி மைனர் என்கிற திரைப்படத்தை சத்யராஜை வைத்து எடுத்துக் கொண்டிருந்த பொழுது அந்தப் படத்தின் கதாநாயகியான சீதா இயக்குனர் பார்த்திபனுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார் இதனால் அந்த திரைப்படம் எடுப்பதில் சிக்கல் உண்டானது இப்படியான எந்த சிக்கலையும் சந்திக்க கூடாது என்பதற்காகவே தயாரிப்பாளர் இப்படியான ஒரு விதிமுறையை விதித்திருந்தார்.

To Top