Cinema History
கார்த்திக்கை வச்சி படம் எடுத்ததால் தற்கொலை வரைக்கும் போனேன்!.. ஒரு போன் கால் வாழ்க்கையை மாத்திடுச்சு!.. மயிரிழையில் தப்பிய இயக்குனர்!.
மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். 1981 இல் வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார் கார்த்திக்.
அதற்கு பிறகு நடிகர் கார்த்திக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில் அப்போது தயாரிப்பாளராக இருந்த சௌந்தர் ராஜன் கார்த்திக்கை வைத்து திரைப்படம் தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் அவருக்கு படம் தயாரிப்பதில் பெரிதாக அனுபவம் இருக்கவில்லை.
விஜய், அஜித் போன்ற நடிகர்களே அப்போது 5 லட்சம், 6 லட்சம்தான் சம்பளமாக வாங்கி கொண்டிருந்தனர். அதுவே தெரியாமல் கார்த்திக்கு 45 லட்சம் சம்பளமாக கொடுத்து தனது படத்துக்கு கமிட் செய்தார் சௌந்தர் ராஜன்.
தயாரிப்பாளர் எடுத்த முடிவு:
அந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக எடுக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து வேற்று மொழி கதாநாயகர்களையும் வைத்து அந்த படம் இயக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு கேம் என்கிற பெயரில் வெளியான அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது.
தனது வீடு வரை அடமானம் வைத்து அந்த படத்தை இயக்கியிருந்த தயாரிப்பாளர் சௌந்தர்ராஜனுக்கு அது பெரும் இடியாக இருந்தது. இதனை தொடர்ந்து சில நாட்கள் அமைதியாக இருந்தவர் ஒரு நாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
கோவிலுக்கு சென்று சாமியை கும்பிட்டுக்கொண்டார். பிறகு அங்கிருந்து ரயில் பாதையில் சென்று ரயிலில் விழுவது அவரது திட்டமாக இருந்தது. இந்த நிலையில் அவருக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியப்போது நடிகர் கார்த்திக் பேசினார்.
அவரிடம் தனது பிரச்சனைகளை கூறியுள்ளார் சௌந்தர் ராஜன். உடனே அவரை வீட்டிற்கு அழைத்த நடிகர் கார்த்திக் பிறகு அவரை கூடவே வைத்துக்கொண்டார். அதன் பிறகு மீண்டும் நல்ல நிலைக்கு வந்ததாக ஒரு பேட்டியில் கூறுகிறார் சௌந்தர் ராஜன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்