கோடிக்கணக்கில் காசு வைத்திருந்தாலும் கூட சிலர் சிறு பணத்திற்கு கூட கணக்கு பார்ப்பவர்கள் பலர் உண்டு. அப்படியான நபர்களில் தயாரிப்பாளர் லலித்தும் ஒருவர் என்பது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.
லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர்தான் லலித் , இவர் 777 ஸ்டுடியோ நிறுவனத்தில் உரிமையாளர் ஆவார். லியோ திரைப்படத்திற்காக இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்துள்ளது. இந்த திரைப்படத்தில் நான் ரெடி தான் வரவா? என்கிற பாடலுக்காக மிகப்பெரிய செட் போடப்பட்டது.
அந்த செட் முழுவதும் தொழிற்சாலை மாதிரியான செட் ஆகும். அதனால் முழுக்க முழுக்க இரும்பு பொருட்கள் போன்றவற்றைக் கொண்டே இந்த செட் போடப்பட்டது. குருவி படத்தில் இதே மாதிரி ஒரு செட்டில் விஜய்க்கு பாடல் இருக்கும். அதை நினைவூட்டும் விதமாகவே இந்த பாடலுக்கு அதேபோன்று செட் போடப்பட்டது.
வழக்கம் போல பாடலின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த செட்டை கலைத்தனர். பொதுவாக இந்த மாதிரி செட் போட்டு வீணாகப் போகும் பொருட்களை எடுத்துக் கொண்டு அதற்கு பணம் கொடுக்க ஒரு குழு இருக்கும்.
அந்த குழு லியோ படத்தின் செட்டை பார்த்துவிட்டு மொத்தமாக இதற்கு இரண்டு லட்சம் ரூபாய் தருகிறோம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் லலித்திற்கு அந்த தொகை குறைவாக தெரிந்துள்ளது. எனவே ஏரியாவில் அவருக்கு தெரிந்த வேறு ஒரு இரும்பு கடைக்காரரை அழைத்து அவரிடம் இந்த செட்டை மொத்தமாக விற்றால் எவ்வளவு வரும் என கேட்டு அவர் மூலமாக செட்டில் இருந்த இரும்பு பொருட்களை விற்றுள்ளார்.
இதன் மூலமாக அவருக்கு ஏழு லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. இவ்வளவு கோடிகளை செலவு செய்த போதும் லலித் இந்த மாதிரியான சின்ன சின்ன செலவுகளை கூட கண்காணிக்கிறார் எனவேதான் விஜய் எப்பொழுதுமே லலித்தை தன்னுடன் வைத்திருக்கிறார் என ஒரு பேட்டியில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருந்தார்.