Latest News
ஹாட்ஸ்டார் செய்த சம்பவத்தால் சிக்கலில் மாட்டிய சூரி படம்!.. படம் வெளியிடுவதில் பிரச்சனை!.
Soori Garudan movie: கொரோனா காலகட்டம் துவங்கியது முதலே ஓ.டி.டி உரிமத்திற்கான மதிப்பு என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டது. ஒரு திரைப்படம் பெரிதாக திரையரங்கில் ஓடவில்லை என்றாலும் கூட ஓ.டி.டி விற்பனை மூலமாக அந்த திரைப்படத்திற்கு ஒரு நல்ல லாபத்தை பார்க்க முடியும்.
உதாரணமாக அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஓ.டி.டி மூலமாக ஒரு தொகை கிடைத்தது. ஆனால் ஓ.டி.டிக்கு திரைப்படங்களை விற்கும் தொகை என்பது போக போக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெரிய கதாநாயகர்களின் கதைகள் படங்கள் எல்லாம் 80 கோடி 100 கோடி என்று விலை வைக்கப்படுவதால் ஓ.டி.டி நிறுவனங்களே திணறுகின்றன.
இந்த நிலையில் இனி அதிக விலைக்கு திரைப்படங்களை வாங்கக்கூடாது என்று ஓடிடி நிறுவனங்கள் முடிவு செய்து இருக்கின்றன. மேலும் வேற்று மொழியில் வந்த திரைப்படங்களை டப்பிங் செய்து அவர்கள் ஓ.டி.டியில் போட்டுக் கொள்வது எளிதாக இருப்பதால் அந்த முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.
தேதி மாற்றமடைந்த கருடன் திரைப்படம்:
முக்கியமாக ஹாட்ஸ்டார் நிறுவனம் மலையாளத்தில் வந்த நிறைய திரைப்படங்களை தமிழ் டப்பிங் செய்து தனது ஓடிடி தளத்தில் போட்டு வருகிறது. இந்த நிலையில் சூரி சசிகுமார் இணைந்து நடிக்கும் கருடன் திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருந்தது.
ஆனால் அந்த திரைப்படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. முதலில் இதை ஹாட்ஸ்டார் நிறுவனம்தான் வாங்க இருந்தது ஆனால் ஹாட்ஸ்டார் நிறுவனம் தற்சமயம் ஜியோ நிறுவனத்துடன் சேர இருப்பதால் தற்சமயம் வாங்கவிருக்கும் படங்களை நிறுத்தி வைத்திருக்கிறது ஹாட்ஸ்டார் நிறுவனம்.
கருடன் திரைப்படம் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டதால் ஓ.டி.டியில் அதை விற்காமல் வெளியிட முடியாது. எனவே ஓ.டி.டி நிறுவனங்களிடம் இதுக்குறித்து பேசி வருகின்றனர். அதற்கு பிறகுதான் கருடன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்