Connect with us

என் தலைவனுக்காக இதை செய்யுறேன்!.. எம்.ஜி.ஆருக்காக ரிக்‌ஷாக்காரன் செய்த செயல்!..

mgr

Cinema History

என் தலைவனுக்காக இதை செய்யுறேன்!.. எம்.ஜி.ஆருக்காக ரிக்‌ஷாக்காரன் செய்த செயல்!..

Social Media Bar

எம்.ஜி.ஆர் நடிகராகவும், தலைவராகவும் இருந்த காலக்கட்டத்தில் அவருக்காக இருந்த கூட்டம் மிக பெரியது. இந்த நிலையில் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்போது அவருக்காக கண்ணீர் விட்ட ரசிகர்கள் ஏராளமானவர்கள்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த விஷயத்தை அறிந்த ரிக்‌ஷாக்காரர் ஒருவர் தம்மிடம் சேமிப்பில் இருந்த காசை எடுத்துக்கொண்டு தந்தி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு எம்.ஜி.ஆருக்கு ஒரு தந்தி எழுதினார். கவலைப்படாதே தலைவரே உனக்காக நாங்கள் இருக்கிறோம். நாங்கள் உயிருடன் இருக்கும் வரை உன்னை சாக விட மாட்டோம் என தந்தி எழுதினார்.

mgr
mgr

இதை அமெரிக்காவில் உள்ள எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார் அந்த ரிக்‌ஷாக்காரர். ஆனால் தந்தி அனுப்புவதற்கு 15 ரூபாய் குறைவாக இருந்தது. உடனே வெளியே சென்ற ரிக்‌ஷாக்காரர் ஒரு மணி நேரம் வரிசையாக சவாரி செய்து 15 ரூபாயை தயார் செய்துகொண்டு தந்தி அலுவலகத்திற்கு வந்தார்.

அதை பார்த்த தந்தி அலுவலர் உங்கள் தலைவர்கள் எல்லாம் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு நல்ல அறையில் சொகுசாக வாழ்கின்றனர். அவர்களுக்காக இப்படி உங்கள் சம்பாத்தியத்தை காலி செய்கிறீர்களே என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அந்த ரிக்‌ஷாக்காரர் மற்ற தலைவர்கள் எப்படியோ ஆனால் எம்.ஜி.ஆரை பொறுத்தவரை எனக்கு மூன்று வேளை சோறு போட்டதே அவர்தான்.

அவர் வாங்கி கொடுத்த ரிக்‌ஷாவில்தான் என் பொழப்பு ஓடுது என கூறியுள்ளார். அதன் பிறகு தந்தியை பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர் அவருக்கு பதில் தந்தியும் அனுப்பினாராம்.

To Top