Connect with us

துப்பாக்கி சுடுறதுலையே நாலு வகை இருக்கு.. –  வடக்கன்ஸை வாய் பிளக்க வைத்த ரஜினி..!

Cinema History

துப்பாக்கி சுடுறதுலையே நாலு வகை இருக்கு.. –  வடக்கன்ஸை வாய் பிளக்க வைத்த ரஜினி..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள கமர்ஷியல் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினி. அவரது தனிப்பட்ட உடல் மொழியின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். ரஜினிகாந்திற்கு பிறகு எவ்வளவோ நடிகர்கள் வந்துவிட்ட பிறகு அவர் பெற்ற உச்சத்தை யாராலும் பெற முடியவில்லை.

ரஜினி நடிப்பில் மாஸ் காட்டிய படங்களில் முக்கியமான திரைப்படம் பேட்ட. பேட்ட திரைப்படத்தை ரஜினியின் ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.

அதில் பேட்டயின் பழைய கதையில் சாவு வீட்டில் ரஜினி ஒருவரை சுட்டு கொலை செய்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியில் அடியாட்கள் கணக்கு காட்டுவதற்காக வடக்கு ஆட்கள் சிலரை நடிக்க வைத்துள்ளனர்.

அப்போது ரஜினி காரில் இருந்து துப்பாக்கியை எடுத்து சுட வேண்டும். ரஜினி அதையே மூன்று நான்கு வகைகளில் ஸ்டைலாக துப்பாக்கியை எடுத்துள்ளார். அதில் எந்த ஸ்டைல் பிடித்துள்ளதோ அதை படத்தில் வைத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

துப்பாக்கி பிடிப்பதில் கூட இவ்வளவு ஸ்டைல் உள்ளதா? என ரஜினிகாந்தை பார்த்து வாயை பிளந்துள்ளனர் இந்தி நடிகர்கள்.

To Top