Connect with us

3 லட்சத்துக்காக அந்த வேலையை பார்க்கலைனா சிம்பு நயன்தாரா காதல் நடந்திருக்காது!. இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சா!..

nayanthara simbu

Cinema History

3 லட்சத்துக்காக அந்த வேலையை பார்க்கலைனா சிம்பு நயன்தாரா காதல் நடந்திருக்காது!. இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சா!..

Social Media Bar

Simbu Nayanthara Love : தமிழ் சினிமாவில் திரைப்படங்களை விடவும் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமாவது அதில் நடக்கும் காதல் கதைகள்தான். சினிமா துவங்கிய காலகட்டம் முதலே நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் என்பது இருந்து கொண்டேதான் இருந்தது.

இடைக்கால சினிமாவில் அது கொஞ்சம் மாறி இயக்குனருக்கும் நடிகைகளுக்க்கும் காதல் என்று மாறியது. அந்த காதலில்தான் சுந்தர் சி குஷ்பூ, ஆர்.கே செல்வமணி மற்றும் ரோஜா போன்ற ஜோடிகளின் காதல்கள் நடந்தன.

nayanthara
nayanthara

அப்படி பிரபலமாக பேசப்பட்ட காதல் கதைகளில் நயன்தாராவின் காதல் கதை மிகவும் முக்கியமானது. ஏனெனில் நயன்தாராவிற்கு மூன்று நபர்களுடன் தமிழ் சினிமாவில் காதல் கதை உண்டு. அதில் முதலில் நயன்தாரா காதலித்தது நடிகர் சிம்புவை தான்.

ஏற்கனவே முடிவான கதாநாயகி:

நடிகர் சிம்புவை நயன்தாரா காதலிக்க காரணமாக இருந்ததே வல்லவன் திரைப்படம்தான். வல்லவன் திரைப்படத்தை படமாக்க முடிவு செய்த பொழுது அதில் த்ரிஷாதான் கதாநாயகியாக நடிக்க இருந்தது. ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே வேறு ஒரு படத்திற்காக மூன்று லட்ச ரூபாய் சம்பளத்திற்கு நயன்தாராவை கமிட் செய்திருந்தார்.

அவருக்கு இரண்டு லட்ச ரூபாய் அட்வான்ஸ் ஆக கொடுத்தும் இருந்தார். எனவே அதை இந்த படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வல்லவன் திரைப்படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க நினைத்தார் தயாரிப்பாளர். ஆனால் அதில் சிம்புவிற்கு அவ்வளவு விருப்பமில்லை திரிஷா கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் சிம்புவின் ஆசையாக இருந்தது.

இருந்தாலும் தயாரிப்பாளர் சொன்னதை கேட்டு நயன்தாராவுடன் நடிக்க தொடங்கினார் சிம்பு. பிறகு அவர்கள் இருவருக்கும் காதல் உருவாக அதுவே காரணமாக அமைந்தது ஒரு வேலை அந்த அட்வான்ஸ் தொகையை நயன்தாரா வாங்காமல் இருந்திருந்தால் சிம்புவுக்கும் நயன்தாராவிற்கும் இடையே காதல் ஏற்பட்டு இருக்குமா? என்பது கேள்விதான் என்று கூறப்படுகிறது.

To Top