உங்க சாதி காரனுக்கெல்லாம் படம் எடுக்க தெரியாது.. போயா!.. எம்.ஜி.ஆர் வீட்டில் சந்திரபாபுக்கு நடந்த கொடுமை!.. சந்திரபாபு தம்பியின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!.
Chandrababu: நடிகர் சந்திரபாபு தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர். திரைத்துறையில் கொடிக்கட்டி பறந்த சந்திரபாபுவின் வீழ்ச்சி என்பது எம்.ஜி.ஆரை வைத்து அவர் இயக்கிய மாடி வீட்டு ஏழை என்கிற திரைப்படத்தில்தான் துவங்கியது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே.
ஆனால் அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும் சந்திரபாபுவிற்கும் இடையே என்னதான் பிரச்சனை ஏற்பட்டது என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். அதை சந்திரபாபுவின் தம்பி ஒரு நேர்க்காணலில் விளக்கியுள்ளார்.

மாடிவீட்டு ஏழை திரைப்படத்திற்காக படப்பிடிப்பை துவங்கியப்போது அதில் பண ரீதியாக சில உதவிகளை சாவித்திரிதான் செய்தார். மேலும் சாவித்திரி சந்திரபாபுவுடன் நட்பில் இருந்ததால் அந்த திரைப்படத்தில் சம்பளம் இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில்தான் மாடி வீட்டு ஏழை திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பு துவங்கி 2000 ரீல்கள் எடுக்கப்பட்ட பிறகு சாவித்திரி அதிக உடல் எடையுடன் இருக்கிறார் என கூறி கதாநாயகியை மாற்ற சொல்லியுள்ளார் எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த சம்பவம்:
ஆனால் படத்தின் தயாரிப்பு செலவுகளிலேயே சாவித்திரிக்கு பங்கு இருக்கும்போது அவரை எப்படி படத்தில் இருந்து நீக்க வேண்டும். மேலும் வேறு கதாநாயகியை வைத்தால் அவருக்கு தனியாக சம்பளம் தர வேண்டும். எடுத்த 2000 ரீல்களும் உபயோகமில்லாமல் போய்விடும் என கூறியுள்ளார் சந்திரபாபு.
இந்த நிலையில் தன்னுடைய நிலத்தை அடகு வைத்து 2 லட்ச ரூபாய் கடன் வாங்கி படத்திற்காக பெரும் ஷெட் ஒன்றை போட்டார் சந்திரபாபு. ஆனால் அந்த படப்பிடிப்புக்கு எம்.ஜி.ஆர் வரவே இல்லை. பல முறை எம்.ஜி.ஆரை சந்திக்க நினைத்தப்போதும் சந்திரபாபுவை எம்.ஜி.ஆர் நிராகரித்தே வந்தார்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு சந்திரபாபு சென்றப்போது அங்கு அவரது சகோதரர் சக்கரபானி இருந்தார். அவரிடம் ஏன் எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்கு வரவில்லை என கேட்டப்போது நீ கதாநாயகியை மாற்று இல்லையென்றால் இயக்குனரை மாற்று. உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் எடுத்து அந்த படம் நல்லா வருமா? பறையர்களுக்கெல்லாம் எப்படியா படம் எடுக்க தெரியும் என சந்திரபாபுவை இகழ்ந்து பேசியதாக அவரது தம்பி கூறுகிறார்.
இதனால் கோபமடைந்த சந்திரபாபு அங்கு கிடந்த நாற்காலியை எடுத்து சக்கரபாணியை அடிக்க சென்றுள்ளார். இந்த விஷயம் எம்.ஜி.ஆர் காதுக்கு போகவே அவர் அதோடு அந்த படத்தை நிராகரித்துவிட்டார். இதனால் கடும் கடன் சுமைக்கு உள்ளான சந்திரபாபு பிறகு அதிலிருந்து மீளவே இல்லை. இந்த தகவல்களை சந்திரபாபுவின் தம்பி பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
Source: Link