Connect with us

கதையே தெரியாம எடுத்து ஹிட் கொடுத்த படம்! –  ரஜினியின் அந்த படம் எது தெரியுமா?

Cinema History

கதையே தெரியாம எடுத்து ஹிட் கொடுத்த படம்! –  ரஜினியின் அந்த படம் எது தெரியுமா?

Social Media Bar

தமிழ் சினிமாவில் இப்போதும் மாஸ் ஹிட் கொடுக்கும் பெரும் கதாநாயகனாக இருப்பவர் ரஜினிகாந்த். கடந்த காலங்களில் அவர் ஹிட் கொடுத்த படங்களில் பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா, முத்து போன்ற திரைப்படங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. அதில் அண்ணாமலை படமும் சேரும்.

அண்ணாமலை திரைப்படம் உருவானதில் ஒரு சுவாரஸ்யமான பின்கதை உண்டு. அண்ணாமலை திரைப்படத்தை கவிதாலயா பிக்சர்ஸ் தயாரிக்க இருந்தது. அந்த படத்தை தயாரிப்பதற்கு முன்பே படத்தின் வெளியீட்டு தேதியை கவிதாலயா நிறுவனம் வெளியிட்டது.

படத்தின் கதை, ரஜினிகாந்த் எல்லாம் தயார். ஆனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு சில காரணங்களால் படத்தை விட்டு விலகினார் இயக்குனர் வசந்த். அவர்தான் அண்ணாமலை திரைப்படத்தை இயக்க வேண்டியது.

இப்படி ஒரு சம்பவம் நடக்கவும் கவிதாலயா குழுமம் கலங்கி போய்விட்டது. அப்போதுதான் கே.பாலச்சந்திரிடம் உதவி இயக்குனராக இருந்த சுரேஷ் கிருஷ்ணா சில படங்களை இயக்கி இயக்குனர் ஆகி இருந்தார். உடனே சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்தார் கே.பாலச்சந்தர்.

அழைத்து விவரங்களை கூறி “நீதான் இந்த படத்தை இயக்க வேண்டும்” இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு என பாலச்சந்தர் கூற திகைத்து போய் நின்றார் சுரேஷ் கிருஷ்ணா.

படத்தின் கதை, வசனம், நடிப்பவர்கள், காஸ்ட்யூம், லொக்கேஷன் எதுவுமே தெரியாமல் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இரண்டு நாட்களுக்குள் படப்பிடிப்பை துவங்க வேண்டும் என்பது எவ்வளவும் பெரிய வேலை.

அப்படியும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பை துவங்கினார் சுரேஷ் கிருஷ்ணா. பிற்பாடு வெளிவந்த அண்ணாமலை மகத்தான வெற்றியை பெற்று தந்தது. அடுத்து அவர்கள் இருவர் கூட்டணியில் உருவான பாட்ஷா படத்திற்கும் இதுவே காரணமாக அமைந்தது.

To Top