Connect with us

மானின் சாபத்தால் அவதிப்படும் சல்மான்க்கான்!.. இரவில் தூக்கம் கூட இல்லை!.

salmankhan deer

News

மானின் சாபத்தால் அவதிப்படும் சல்மான்க்கான்!.. இரவில் தூக்கம் கூட இல்லை!.

Social Media Bar

பாலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சல்மான்கான். பெரும்பாலும் அவர்து திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியவை. சமீபத்தில் ஒரு நாள் அதிகாலையில் சல்மான்கான் வீட்டின் முன்பு இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்ற நிகழ்வு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாக இருந்தது.

இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டுக்கு டெல்லி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் பின்ஷோய் இவர்கள்தான் காரணம் என இவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். பஞ்சாப் பாடகரான சிது மூஸ்வாலாவில் துவங்கி சில படுகொலை வழக்குகளாக கைது செய்யப்பட்டவர் லாரன்ஸ் பிஷ்னோய்.

அவருக்கு சல்மான்கானுக்கும் நேரடியாக எந்த ஒரு பகையும் கிடையாது. இருந்தாலும் ஏன் சல்மான்கானுக்கு இவர் கொலைமிரட்டல் விடுத்து வருகிறார் என பார்க்கும்போது அதற்கு ஒரு மான்கறிதான் காரணமாக அமைந்துள்ளது.

1998 ஆம் ஆண்டு சல்மான்கான் ராஜஸ்தானில் ஒரு படப்பிடிப்புக்கு சென்றப்போது அங்கு அரிய வகை மானை வேட்டையாடியதாக அவரை கைது செய்தனர். அதற்காக அவருக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த மானை பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சல்மான்கான் அந்த மானை வேட்டையாடியது அன்மோல் பின்ஷோய்க்கு கோபத்தை ஏற்படுத்தவே அப்போது முதலே அவர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறாராம்.

To Top