News
மகிழ் திருமேணி விஜய்க்காக எழுதின கதை அது. இப்ப அஜித்தை வச்சி எடுக்குறார்!.. பெரும் ட்விஸ்டால இருக்கு!..
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் பெரும் கதாநாயகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்றால் அது பெரிய கடினமான விஷயமாக இருந்தது. ஏனெனில் அதிகமான அனுபவம் உள்ள இயக்குனர் மட்டும்தான் பெரும் நாயகர்களை வைத்து படம் இயக்க முடியும் என்கிற நிலை இருந்தது.
ஆனால் இப்போது அது முற்றிலுமாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு திரைப்படம் ஹிட் கொடுத்துவிட்டாலே அவர்களது படங்களில் நடிக்க பெரிய பெரிய ஹீரோக்களே தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில் ஆரம்பத்தில் பெரிதாக வெற்றி படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் மகிழ்ச்திருமேனி இயக்கிய திரைப்படங்களுக்கு வரவேற்பு இருந்தது.

அவர் இயக்கிய மீகாமன் போன்ற திரைப்படங்கள் வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் இயக்கிய திரைப்படம் தடம். தடம் திரைப்படம் வெகுவாக வரவேற்பை பெற்றது. இது குறித்து உதயநிதி ஒரு பேட்டியில் கூறும் பொழுது தடம் திரைப்படம் நான்தான் நடிக்க இருந்தது.
ஆனால் எனக்கு அப்பொழுது இருந்த வேலைகள் காரணமாக அந்த படத்தில் அருண் விஜய் நடித்தார். அதன் பிறகு நான் என்னை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று மகிழ்ந்திருமேனியிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர் அதற்கு முன்பே விஜய்க்காக ஒரு கதையை எழுதி வைத்திருந்தார்.

ஆனால் நான் கண்டிப்பாக என்னை வைத்து படம் இயக்கி விட்டு பிறகுதான் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் என்னை வைத்து கலகத் தலைவன் திரைப்படத்தை இயக்கிவிட்டு பிறகு விஜய்யை வைத்து படம் இயக்க சென்றார்.
ஆனால் விஜய் அடுத்த படத்தில் கமிட் ஆனதால் தற்சமயம் அந்த கதையை வைத்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கி வருகிறார் மகிழ்திருமேனி என்று கூறியுள்ளார் உதயநிதி. ஆனால் அஜித்திற்கு எழுதும் பொழுது இந்த கதையில் நிறைய மாற்றங்களை செய்திருப்பார் மகிழ்த்திருமேனி என்று எதிர்பார்க்கப்படுகிறது.
