Connect with us

4 வரியில் கதை சொல்லு!.. சான்ஸ் தர்றேன்!.. பாக்கியராஜிற்கு எம்.ஜி.ஆர் பட தயாரிப்பாளர் வைத்த டாஸ்க்!..

bhagyaraj

Cinema History

4 வரியில் கதை சொல்லு!.. சான்ஸ் தர்றேன்!.. பாக்கியராஜிற்கு எம்.ஜி.ஆர் பட தயாரிப்பாளர் வைத்த டாஸ்க்!..

Social Media Bar

Bhagyaraj : தமிழில் குடும்ப படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். படத்தில் இளைஞர்களுக்கான காமெடி காட்சிகள் இருந்தாலும் கூட தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடிய திரைப்படங்களாகவே பாக்கியராஜின் திரைப்படங்கள் இருந்துள்ளன.

பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தில்தான் முதன் முதலாக உதவி இயக்குனராக சேர்ந்தார் பாக்கியராஜ். சினிமாவிற்கு வந்தப்போதே பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்ததால் பாக்கியராஜால் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது.

முக்கியமாக குறைந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல சினிமாவை எப்படி எடுக்க முடியும் என்பதை பாரதிராஜாவிடமிருந்து பாக்கியராஜ் கற்றுக்கொண்டார். அதனாலேயே அப்போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது.

இந்த நிலையில் சில வெற்றிபடங்களை கொடுத்த பிறகு ஒருமுறை பிரபல சினிமா தயாரிப்பாளரான சின்னப்பா தேவரை சந்திக்க சென்றிருந்தார் பாக்கியராஜ். சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆர் முதல் பல பிரபலங்களை வைத்து படம் தயாரித்தவர்.

அவரிடம் கதையை சிறப்பாக கூற வேண்டும் என நினைத்த பாக்கியராஜ் கஷ்டப்பட்டு சிறப்பாக கதையை தயார் செய்துக்கொண்டு அவரை நேரில் பார்க்க சென்றார். அவரை சந்தித்த பாக்கியராஜிடம் சின்னப்பா தேவர் பேசும்போது எனக்கு 4 வரியில் உன் படக்கதையை சுருக்கமாக கூறு என கூறினார்.

இதுவரை எந்த ஒரு தயாரிப்பாளரிடமும் அப்படி சுருக்கமாக பாக்கியராஜ் கதையை கூறியது கிடையாது. மொத்தமாக தயாரிப்பு செலவுகளை செய்வதால் எந்த ஒரு தயாரிப்பாளரும் முழுக்கதையை கேட்டப்பிறகே தயாரிப்பது குறித்து யோசிப்பார்கள்.

ஆனால் இவர் என்ன இப்படி கேட்கிறார் என யோசித்த பாக்கியராஜ் சுருக்கமாக கதையை கூற முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவரால் அப்படி சொல்ல முடியவில்லை. இதனால் கடுப்பான சின்னப்பா தேவர் எழுந்து சென்றுள்ளார்.

பிறகுதான் பாக்கியராஜிற்கு புரிந்துள்ளது. எந்த ஒரு நல்ல படத்தையும் சுருக்கமாக சொல்ல தெரிந்திருக்க வேண்டும் என்று. அதற்கு பிறகு சின்னப்பா தேவர் தயாரிப்பில் படம் இயக்கவில்லை என்றாலும் அது அவரிடம் கற்றுக்கொண்ட பாடமாக இருந்தது என பாக்கியராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top