Connect with us

வட இந்தியாவில் லியோ படத்தை ரிலீஸ் பண்ணலை!.. எல்லாம் ஓ.டி.டியால் வந்த பிரச்சனை!.. பத்திரிக்கையாளர் சொன்ன பகீர் தகவல்…

leo netflix

News

வட இந்தியாவில் லியோ படத்தை ரிலீஸ் பண்ணலை!.. எல்லாம் ஓ.டி.டியால் வந்த பிரச்சனை!.. பத்திரிக்கையாளர் சொன்ன பகீர் தகவல்…

Social Media Bar

உலக அளவில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்து வருகிறது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாள் முதலே அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

தற்சமயம் அதனை பூர்த்தி செய்யும் விதமாக திரைப்படம் இருப்பதால் தொடர்ந்து அந்த படத்தை இரண்டு மூன்று தடவை எல்லாம் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் இந்தியாதான் விஜய்க்கு உள்ள பெரிய மார்க்கெட்.

ஆனால் வட இந்தியாவில் படம் துவங்கிய காலம் முதலே பெரிதாக பப்ளிசிட்டி என்று எதுவும் செய்யவில்லை. அதனால் படம் வட இந்தியாவில் பெரிதாக வரவேற்பை பெருமா என்கிற கேள்வி இருந்து வந்தது. இந்த நிலையில் படத்தை ஓ.டி.டி நிறுவனமான நெட் ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

படத்திற்காக 125 கோடி ரூபாய் நெட்பிளக்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நெட்ப்ளிக்ஸில் படத்தை விற்றதன் காரணமாக படத்தை வெளியிட முடியாது என வட இந்திய திரையரங்குகள் பிரச்சனை செய்கின்றன என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது பொதுவாக ஓடிடியை பொறுத்தவரை படம் வெளியாகி 6 முதல் 8 வாரங்கள் கழித்துதான் அது ஓ.டி.டியில் வெளியாகும். ஆனால் நெட்ஃப்ளிக்ஸை பொறுத்த வரை படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து அவர்கள் ஓ.டி.டியில் வெளியிட்டு விடுவார்கள்.

இந்த நிலையில் அந்த படத்தை ஒரு மாதம் மட்டும் வைத்து ஓட்ட முடியாது என்று வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் படத்தை எடுக்க மறுத்துவிட்டனர். தற்சமயம் சிங்கிள் தியேட்டர்களில் மட்டும் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று கூறுகிறார் செய்யாறு பாலு. எனவே இவர்கள் நெட்ப்ளிக்ஸிடம் பேசினால் மட்டுமே வட இந்தியா முழுவதும் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

To Top