Connect with us

ஆளுக்கு ஒரு கோடி கொடுங்க!.. நடிகர் சங்கம் கட்டிடம் குறித்து எடுத்த அதிரடி முடிவு!..

actor vishal

News

ஆளுக்கு ஒரு கோடி கொடுங்க!.. நடிகர் சங்கம் கட்டிடம் குறித்து எடுத்த அதிரடி முடிவு!..

Social Media Bar

Nadigar Sangam : நடிகர் சங்கப் பிரச்சனை என்பது ஆண்டாண்டு காலமாக தமிழ் சினிமாவில் நீடித்து வரும் பிரச்சனையாகும். நடிகர் சங்கத்திற்கான கட்டிடத்தை கட்ட வேண்டும் என்கிற பேச்சு பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.

கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் கூட நடிகர்களால் அந்த கட்டிடத்தை கட்டி முடிக்க முடியவில்லை என்பது பொதுமக்களுக்கு அதிசயமான விஷயமாகத்தான் இருக்கிறது. இதில் நடிகர் சங்க கட்டிடத்திற்கான இடம் கடனில் இருந்தபோது விஜயகாந்த் ஸ்டார் இரவு என்கிற நிகழ்ச்சியை வெளிநாடுகளில் நடத்தி அந்த பத்திரத்தை மீட்டுக் கொடுத்தார்.

தற்சமயம் முக்கால்வாசி வேலைகள் இந்த கட்டிடம் தொடர்பாக முடிந்து விட்டது என கூறப்படுகிறது. பாக்கி வேலைகளை செய்வதற்கு வங்கியில் கடன் வாங்கலாம் என முடிவு செய்துள்ளது நடிகர் சங்கம். இது குறித்து வங்கியிடம் பேசும் பொழுது யார் வங்கிக்கு மாதாமாதம் வட்டி யார் கட்டுவது என்கிற கேள்வி வந்தது.

vishal1
vishal1

அதற்கு ஒரு தனிப்பட்ட நடிகரை மட்டும் செய்ய சொல்லி கூற முடியாது என்பதால் ஒரு புது முடிவை எடுத்து இருக்கின்றனர் நடிகர் சங்கத்தினர். அதாவது 30 பெரும் நடிகர்களிடம் ஒரு கோடி ரூபாயை கடனாக வாங்கி அதனை வங்கியில் போட்டு வைத்து அதில் வரும் வட்டியை நமது கடனுக்கு வட்டியாக கட்டி விடலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததில் நடிகர் கார்த்தி தனுஷ் சூர்யா சிம்பு விஷால் போன்றோர் ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் தர முன்வந்துள்ளனர்.

ஆனால் ரஜினிகாந்த் இன்னும் அது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது 30 நபர்கள் இதற்காக பணம் தரும் பட்சத்தில் நடிகர் சங்கம் முழுதாக கட்டி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

To Top