News
சுயமரியாதை ல கை வச்சா யாருக்குதான் கோபம் வராது!.. இயக்குனர் எதிர்நீச்சல் சீரியலை முடிக்க இதுதான் காரணம்..
சன் டிவியில் வெகு நாட்களாகவே பிரபலமான சீரியல்களை இயக்கி வரும் இயக்குனராக திருச்செல்வம் இருந்து வருகிறார். மெட்டி ஒலி சீரியலில் சந்தோஷ் என்கிற கதாபாத்திரமாக முதன் முதலாக நடித்திருந்தார் திருச்செல்வம்.
அதனை தொடர்ந்து பிறகு கோலங்கள் சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கோலங்கள் சீரியல் அவரால் இயக்கப்பட்டு வெகு வருடங்கள் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ஆகும்.
நடிகரில் மாற்றம்:
அதற்குப் பிறகு அவ்வளவு காலங்கள் ஒளிபரப்பான சீரியல் என்றால் சந்திரலேகா என்கிற சீரியல் தான். இந்த நிலையில் தற்சமயம் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி எதிர்நீச்சல் ஆகும்.

எதிர்நீச்சல் நிகழ்ச்சியில் ஆதி குணசேகராக மாரிமுத்து நடித்து வந்த வரை நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால் அவரது இறப்பிற்கு பிறகு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க வைக்கப்பட்டார்.
இயக்குனர் செய்த வேலை:
அதற்குப் பிறகு கதையில் நிறைய மாற்றங்களை செய்தார் திருச்செல்வம். இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் அது அதிருப்தியை ஏற்படுத்தியது இதனை தொடர்ந்து சன் டிவி நிறுவனம் திருச்செல்வத்திற்கு தொடர்ந்து கதையில் மாற்றத்தை செய்யுமாறு வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சன் டிவி அனுப்பிய ஒரு மெயில் திருச்செல்வத்திற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்த அவர் இதோடு நாடகத்தை முடித்துக்கொள்கிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

கண்டிப்பாக அவர் சுயமரியாதையை சீண்டும் வகையில் அந்த மெயிலில் ஏதோ எழுதப்பட்டு இருக்கிறது. அதனால்தான் அவர் இப்படியான முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இனி சன் டிவியில் திருச்செல்வம் நாடகங்கள் இயக்குவாரா? என்பது சந்தேகமான விஷயமாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது.
