நேற்று முன் தினம் பாராளுமன்ற தேர்தல் நடந்த நிலையில் நடிகர் விஜய்யும் அதற்கு வந்து ஓட்டு போட்டிருந்தார். ஆனால் அவர் அவ்வளவு எளிதாக ஓட்டு போட வர முடியவில்லை. ரஷ்யாவில் உள்ள ஒரு பகுதியில் படப்பிடிப்புக்கு சென்றிருந்தார் விஜய்.
இயற்கை பேரிடர்கள் காரணமாக அங்கிருந்து இந்தியாவிற்கு அவர் வருவதே பெரும் பாடாகிவிட்டது. இந்தியாவிற்கு வந்த உடனேயே வீட்டிற்கு கூட செல்லாமல் ஓட்டு போட வாக்குச்சாவடிக்கு வந்தார் விஜய். ஆனால் ஏனோ அன்று விஜய் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
மேலும் அப்போது அலைக்கடலென திரண்ட கூட்டத்தால் அவர் பயந்துவிட்டதாகவும் சிலர் கூறினர். ஆனால் உண்மை வேறு விதமாக இருந்தது. தேர்தலுக்கு முதல் நாள் படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

அப்போது விஜய்க்கு கைகளிலும் தலையிலும் அடிப்பட்டுள்ளது. அவரை அங்கேயே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 10 நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என கூறியும் ஓட்டு போடுவதற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார் விஜய்.
அதனால்தான் அவர் அன்று அவ்வளவு சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதை புரிந்துக்கொள்ளாத மீடியாக்கள் அவரை இப்படி கேலி பேசுகின்றனர் என கருத்து தெரிவிக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.






