இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை! – துணிவு படம் செய்த சாதனை!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து தற்சமயம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.

Social Media Bar

இந்த நிலையில் துணிவு படத்திற்கும் வாரிசு படத்திற்கும் இடையே அதிக போட்டி நிலவி வருகிறது. தற்சமயம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. எனவே துணிவு படமும் அதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது.

துபாயில் உள்ள உலகின் மிகபெரிய கட்டிடமான ப்ருஜ் கலிஃபாவில் துணிவு படத்தின் ட்ரைலர் திரையிடப்பட்டது. அதே போல ஸ்கை டைவிங் மூலம் துணிவு படத்தின் ஃப்ளக்ஸ் வானில் விரிக்கப்பட்டது.

தற்சமயம் இன்னும் ஒரு படி சென்ரு ஹோலோகிராம் முறையில்  மலேசியாவில் துணிவு ட்ரைலரை திரையிட உள்ளனர். இது ஒரு புது தொழில்நுட்பமாகும். இதற்கு முன்பு அவதார் 2 திரைப்படத்தின் ட்ரைலர் இதே போல திரையிடப்பட்டது.

அதற்கு பிறகு முதன் முதலாக இந்திய சினிமாவில் துணிவு திரைப்படத்தின் ட்ரைலர்தான் இந்த தொழில்நுட்பத்தில் திரையிடப்படுகிறது.