Latest News
எம்.ஜி.ஆர் பண்ணுன அந்த விசயத்தை விஜய் பண்ணலை!.. அதான் வருத்தமா இருக்கு!.. புலம்பும் விநியோகஸ்தர்கள்!..
MGR and Vijay: திரைத்துறையில் பிரபலமாக இருந்து வரும் அதே சமயத்தில் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு செல்கிறார் விஜய். இந்த ஒரு விஷயமே அவர் குறித்து மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஏனெனில் 100 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்கிற நிலையில் அந்த சினிமாவை விட்டுவிட்டு மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக அரசியலுக்கு விஜய் வருகிறேன் என கூறுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.
இது குறித்து பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் பேசும்பொழுது விஜய் சினிமாவில் சிறு வயது முதலே பல விமர்சனங்களை வாங்கிதான் பெரிய ஆளாகி இருக்கிறார். ஆரம்பத்தில் அவரை உருவக்கேலி செய்திருக்கின்றனர். அவர் நடிக்கவே லாயக்கு இல்லை என்றெல்லாம் கூறி இருக்கின்றனர்.
அரசியல் வருகை
அது அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டுதான் சினிமாவில் பெரிதாக வந்திருக்கிறார். எனவே அரசியலிலும் இது மாதிரியான எதிர்மறை கருத்துக்களை கண்டு அவர் பின் வாங்க போவதில்லை. ஆனால் இவ்வளவு பெரும் வசூலை கொடுக்கக்கூடிய நடிகர் சினிமாவை விட்டுப் போகிறார் என்பது எங்களுக்கு வருத்தம் தான்.
எம்.ஜி.ஆர் கூட சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு அரசியலுக்கு வந்த பிறகு ஐந்து வருடங்கள் தொடர்ந்து பத்துக்கும் அதிகமான திரைப்படங்களை நடித்துக் கொடுத்தார். ஆனால் விஜய்யை பொருத்தவரை 2026 ஆம் ஆண்டு தான் தேர்தல் வருகிறது என்றாலும் இரண்டு படங்களுக்கு மேல் நடிக்க போவதில்லை என்று கூறி இருப்பது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது.
முதல் ஆள் எம்.ஜி.ஆர்:
அதேபோல பிரபலமாக இருந்து கொண்டே அரசியலுக்கு வரும் முதல் நடிகர் விஜய் ஒன்றும் கிடையாது. எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்த பொழுது சினிமாவில் பெரும் உயரத்தில்தான் எம்.ஜி.ஆர் இருந்தார். அவரது திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றி கொடுத்துக் கொண்டிருந்தன.
இருந்தாலும் அதை விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வந்தார் அதேபோலதான் விஜய்யும் வந்திருக்கிறார். எனவே பெரிய மார்க்கெட்டை வைத்துக் கொண்டு விஜய் மட்டுமே அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வரவில்லை என்று கூறி இருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்