Tamil Cinema News
ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்திலும் டைட்டில் பஞ்சாயத்து… வரிசையாக எஸ்.கேவுக்கு வரும் சிக்கல்கள்.!
தற்சமயம் சிவகார்த்திகேயன்தான் தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம்தான் பராசக்தி. இந்த படத்தின் பெயர் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
ஏனெனில் தமிழில் நடிப்புக்கு இலக்கணமாக திகழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படத்தின் பெயர்தான் பராசக்தி. எனவே இந்த பராசக்தி என்கிற பட டைட்டிலுக்கு என்று ஒரு பெருமை இருந்து வருகிறது. ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களே இந்த டைட்டிலில் நடிக்க ஆசைப்பட்டாலும் அது சிவாஜியின் பெருமையை பாதிக்கும் என யாருமே அந்த டைட்டிலில் நடிக்கவில்லை.
நிலைமை இப்படியிருக்க சிவகாத்திகேயனும் நடிகர் விஜய் ஆண்டனியும் அந்த டைட்டிலுக்காக சண்டையிட்டு வருகின்றனர். இதற்கு நடுவே தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. ஆனால் படத்துக்கு இன்னமும் பெயர் வைக்கப்படாமல் இருந்து வருகிறது. அடுத்த வாரம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பெயர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்கு பழைய படங்களின் பெயர்கள்தான் வைக்கப்படும். அப்படியாக இந்த படத்திற்கும் ஏற்கனவே வந்த படத்தின் பெயர்தான் வைக்கப்பட இருக்கிறதாம். ஆனால் அந்த தலைப்புக்கான உரிமத்தை ஒரு தயாரிப்பாளரிடம் வாங்க வேண்டும்.
அவர் தற்சமயம் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்தப்பிறகுதான் டைட்டிலை கன்ஃபார்ம் பண்ண முடியும் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
