Cinema History
சாமி கும்பிட போனதால் பறிப்போன வாய்ப்பு!. இருந்தாலும் இளையராஜா இப்படி பண்ணியிருக்க கூடாது!..
Ilayaraja Movies : தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் முக்கியமானவர். இளையராஜா இசையமைக்கும் பாடல்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் தனி வரவேற்பு உண்டு. இளையராஜாவின் கூட பழகியவர்களை பொறுத்தவரை அவரைக் குறித்து நல்லவிதமான விமர்சனங்களை அளிப்பவர்களும் உண்டு.
கெட்ட விதமான விமர்சனங்களை அளிப்பவர்களும் உண்டு. இந்த நிலையில் இளையராஜா வாய்ப்புக் கொடுக்க நினைத்தும் அந்த வாய்ப்பை தவறவிட்ட பாடகர் ஒருவர் அது குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இளையராஜா இசையில் நிறைய பாடல்கள் பாடியிருந்தாலும் கூட பெரிதாக தெரியாமல் போன பாடகர்களில் டி கே எஸ் கலைவாணனும் ஒருவர்.

டி கே எஸ் கலைவாணன் இளையராஜாவிடம் ஆதி காலம் முதலே நண்பராக இருந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று இளையராஜா நினைத்தார். அப்போது கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் இசை வேலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது டி கே எஸ் கலைவாணனுக்கு போன் செய்த இளையராஜா நாளை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்தால் உங்களுக்கு பாடுவதற்கு வாய்ப்பு தருகிறேன் என கூறினார்.
ஆனால் அன்றைய தினம் தனது தாயுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று இருந்தார் டி.கே.எஸ் கலைவாணன். எனவே ஒரு நாள் கழித்துதான் நான் வர முடியும் என்று அவர் கூறிவிட்டார். ஆனால் நாளையே வந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டு ஃபோனை வைத்து விட்டார் இளையராஜா. பிறகு டி கே எஸ் மறுநாள் வராத காரணத்தினால் அந்த பாடல் வேறு ஒரு பாடகரை வைத்து பாடப்பட்டது எனவே சினிமாவில் சின்ன சின்ன வாய்ப்புகள் கூட முக்கியமானது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
