Tamil Cinema News
ஓடிடி வெளியீட்டுக்கு தயாரான டூரிஸ்ட் பேமிலி – எப்போ ரிலீஸ் தெரியுமா?
கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இப்போது வரை அதிக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ஃபேமிலி மேன். இந்த திரைப்படத்தில் நடிகர் சசிக்குமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
14 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருகிறது. இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்திற்கு இந்த திரைப்படம்தான் முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படம் குறித்து ஒரு குடும்பத்தை மட்டும் அடிப்படையாக வைத்து செல்கிறது.
வர வர சினிமாவில் ஆக்ஷன் படங்களுக்குதான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் குடும்ப படங்களின் வருகை என்பது குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழில் வரும் குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரியான படங்களுக்கு தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் எப்போது இந்த படம் ஓ.டி.டிக்கு வரும் என சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். ஏனெனில் திரையரங்க கட்டணங்கள் என்பது எல்லா மக்களுக்கும் கட்டுபடியாகும் அளவில் இல்லை. இதனால் ஓ.டி.டி வழியாக படத்தை பார்ப்பவர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர்.
அதன்படி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே 31 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டியில் வெளியாக இருக்கிறது.
