Tamil Cinema News
ப்ரோமோஷன் கொடுத்தவருக்கே இந்த நிலையா.. வெங்கட் பிரபு வாய்ப்பில் கை வைத்த எஸ்.கே..!
சிவகார்த்திகேயன் தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் என்பது அதிகரித்து வருகின்றன.
இதற்கு நடுவே அமரன் திரைப்படம் வெளியான பிறகு சிவகார்த்திகேயன் சம்பளம் என்பதும் அதிகரித்தது. இந்த நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் எல்லாம் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.
இதுவரை காமெடி படங்களாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது சீரியஸான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் சுதா கொங்காரா திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்தன. ஆனால் அதில் இப்போது மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அந்த கதை டாக்டர் கதை போலவே இருப்பதால் அதை மாற்றும்படி கூறியுள்ளார் எஸ்.கே.
ஆனால் அதை வெங்கட் பிரபு கேட்கவில்லையாம். இந்த நிலையில் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் எஸ்.கே நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
