Connect with us

வயகராவில் துவங்கி கலைஞர் வரை.. வாலி வறுத்தெடுத்த பாடல்கள் லிஸ்ட் இதோ!..

poet vaali

Latest News

வயகராவில் துவங்கி கலைஞர் வரை.. வாலி வறுத்தெடுத்த பாடல்கள் லிஸ்ட் இதோ!..

Poet Vaali: நாம் எவ்வளவு கவலையாக இருந்தாலும் ஒரு சிலரின் பாடல்களைக் கேட்டால் நமக்கு மன ஆறுதல் கிடைக்கும். ஒரு படம் மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டுமென்றால், அதற்கு பாடல்களும் முக்கிய காரணம். அந்த பாடல்வரிகளுக்கு ஏற்ற இசையை அமைத்து அது மக்களை சென்றடைவது என்பது பெரிய விஷயம் அல்ல. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல பாடல்கள், அதிலும் முக்கியமாக 80ஸ் மற்றும் 90ஸ் காலத்தில் வந்த பாடல்கள் இன்றளவும் சற்று அமர்ந்து கேட்கும் அளவிற்கு அனைவரும் ரசிக்கும் படியாக அமைந்தது.

தற்பொழுது கூட பாடல் வரிகள் முக்கியமா? இசை முக்கியமா? என்று விவாதங்கள் எல்லாம் சென்று கொண்டு இருக்க, ஒரு பாடல் மக்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு இந்த இரு விஷயங்களும் முக்கியம் என்பது நாம் அறிந்ததே. எனினும் சில கவிஞர்கள் தங்கள் பாடல் வரிகளில் நாட்டு நடப்புகளை வைத்து எழுதி வருவதும், அதன் மூலம் அந்த கவிஞர்கள் எவ்வளவு ட்ரெண்டிங் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிய முடியும்.

அந்த வகையில் யாராலும் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு கவிஞராக இருந்தவர்தான் வாலி. அவர் எல்லா காலங்களில் உள்ள ரசிகர்களுக்கு ஏற்றவாறு பாடல் வரிகளை எழுதுவதில் வல்லமை மிக்கவர். அந்த வகையில் அவர் எந்த அளவிற்கு தொழில்நுட்பங்களுடனும், காலத்துடனும் ஒன்றி போய் உள்ளார் என்பதை சில பாடல்வரிகளின் மூலம் நாம் இங்கு அறிய முடியும். அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கவிஞர் வாலி

கவிஞர் வாலி, தமிழ் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசியர் ஆவார். வாலி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் இவர் படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

vaali

வாலியின் 80-வது பிறந்த நாளில் நடைபெற்ற விழாவில் வாலி ஆயிரம் என்ற பெயரில் வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப் பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அதில் கமல்ஹாசன், சூர்யா,சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ட்ரெண்டிங்கில் வாலி

வாலி பாடல்கள் எழுதுவதில் தனித்துவம் படைத்தவர். அதன் அடிப்படையில் அவர் சினிமா பாடல்கள் எழுதும் பொழுது, அந்த சமயம் எது ட்ரெண்டிங்கில் இருக்குமோ, அந்த வார்த்தைகளை பயன்படுத்தி பல பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும் அந்தப் பாடல் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும். அவ்வாறு அவர் 1998 ஆம் ஆண்டு வயாகரா என்ற ஒரு மாத்திரை அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டு வந்தது. அந்த வார்த்தையை பயன்படுத்தி, அவர் என் சுவாச காற்றே படத்தில் “காதல் வயகரா” என்ற பாடலை எழுதியிருப்பார்.

மேலும் அந்த சமயம் வெங்காய விலை அதிகமாக இருந்ததால், அதனையும் வயகரா பாடலில் அவர் வரிகளாக எழுதி இருப்பார். “வெங்காய விலை போல இறங்காது” என்ற வரியை அந்த பாடலில் குறிப்பிட்டு இருப்பார்.

மேலும் 1984 ஆம் ஆண்டு பிரபுதேவா, குஷ்பூ நடித்த ஒரு படத்தில் “மெட்ரோ சேனல்” என்ற பாடலை எழுதியிருப்பார். ஏனெனில் அந்த சமயத்தில் மெட்ரோ சேனல் பிரபலமாக பேசப்பட்ட ஒன்றாகும். எனவே அந்த வார்த்தையை பயன்படுத்தி அந்த பாடல் அவர் எழுதியிருப்பார்.

1993இல்அதன் பிறகு “தூக்கடா” என்னும் வார்த்தையை பயன்படுத்தி ஒரு பாடலை எழுதியிருப்பார் ஏனென்றால் துக்கடா என்ற வார்த்தை அப்பொழுது பேசுபொருளாக இருந்தது.

அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு “பின்லேடன்” பற்றிய செய்திகள் செய்தி சேனலில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதனை பயன்படுத்தி அவர் மங்காத்தா படத்தில் வாடா பின்லேடா என்ற பாடலை எழுதியிருப்பார்.

மேலும் அதே பாடலில் “பறவை காய்ச்சல் பன்றி காய்ச்சல்” அப்பொழுது பரவி வந்ததால் அந்த வார்த்தைகளையும் அந்த பாடலில் பயன்படுத்தி எழுதியிருப்பார்.

அதன் பிறகு கடந்த 2008 இல் இருந்து 2011 வரை தமிழகத்தில் அதிகளவு மின்வெட்டு ஏற்பட்டு கொண்டிருந்தது. அதனை சாதகமாக பயன்படுத்தி சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் “மின்வெட்டு நாளில்” என்ற பாடலை அவர் எழுதியிருப்பார். இதனால் கவிஞர் வாலி ட்ரெண்டிங்கில் இருந்தது தெரிய வருகிறது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

anikha surendar
krithi shetty
radhika vichitra
GOAT
GOAT
GOAT
To Top