Connect with us

வந்த வேகத்துக்கு சம்பவத்தை செஞ்சிட்டீங்களே!.. இப்ப த்ரிஷாதான் லேடி சூப்பர் ஸ்டார் போல!.. நயன்தாராவிடம் சிக்கிய தயாரிப்பாளர்கள்!.

trisha nayanthara

News

வந்த வேகத்துக்கு சம்பவத்தை செஞ்சிட்டீங்களே!.. இப்ப த்ரிஷாதான் லேடி சூப்பர் ஸ்டார் போல!.. நயன்தாராவிடம் சிக்கிய தயாரிப்பாளர்கள்!.

Social Media Bar

சினிமாவில் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ டாப் லெவலில் இருக்கிறார்களா என்பதை அவர்களது சம்பளம்தான் முடிவு செய்கிறது என கூற வேண்டும். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்தான் டாப் நடிகர்களாக பார்க்கப்படுவார்கள்.

அந்த வகையில் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வந்தார். கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் அவர் சம்பளமாக வாங்கி வந்தார். ஆனால் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்புகள் மட்டும் கிடைக்கவே இல்லை.

nayanthara-2
nayanthara-2

அதிலும் இறுதியாக அவர் நடித்த அன்னப்பூரணி திரைப்படம் ஒரு கோடிக்கு கூட ஓடவில்லை. இந்த நிலையில் த்ரிஷாவும் நயன் தாராவும் ஒரே சமயத்தில்தான் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்கள். சொல்ல போனால் நயன் தாராவை விட த்ரிஷாவிற்கு நிறைய படங்கள் வெற்றி கொடுத்துள்ளன.

ஆனால் இடையில் அவருக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போனது. இதனால் முதல் இடத்தை நயன் தாரா பிடித்துக்கொண்டார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த நிலையை மாற்றி அமைத்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷாவிற்கு ரசிக பட்டாளம் அதிகரிக்க துவங்கியது.

trisha
trisha

அதனை தொடர்ந்து மீண்டும் வாய்ப்புகளை பெற துவங்கினார் த்ரிஷா. தொடர்ந்து பெரும் நடிகர்கள் படங்களில் வாய்ப்பு கிடைத்தது. லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவை இல்லாமல் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் த்ரிஷா. இந்த திரைப்படத்திற்கு த்ரிஷாவிற்கு சம்பளமாக 12 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனையடுத்து த்ரிஷா தன்னை விட அதிக சம்பளம் வாங்குவதால் நயன் தாரா அடுத்து கமிட் ஆகும் திரைப்படங்களில் எல்லாம் சம்பளத்தை உயர்த்தி வருகிறாராம். இதனால் அந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

To Top