Tamil Cinema News
அரசியலுக்கு செல்கிறாரா த்ரிஷா.. திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!
நடிகர்கள் பொதுவாக பல காலங்கள் சினிமாவில் நிலைத்து கொண்டிருப்பது சாதாரண விஷயம்தான். அவர்களுக்கு இருக்கும் ரசிகர் சங்கங்களே அவர்கள் வரவேற்பு பெற காரணமாக இருப்பார்கள். ஆனால் நடிகைகளுக்கு தொடர்ந்து 5 வருடம் சினிமாவில் வரவேற்பை பெற்று இருப்பதே கடினமான காரியமாக இருக்கிறது.
சில நடிகைகள் மட்டுமே 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று வருகின்றனர். அப்படியான நடிகைகளில் த்ரிஷா முக்கியமானவர். பெரும்பாலும் த்ரிஷா நடிக்கும் திரைப்படங்களில் படங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறதோ இல்லையோ த்ரிஷாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவிடுகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பெரிய நடிகர்கள் படங்களில் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் த்ரிஷா. இந்த நிலையில் த்ரிஷா திடீரென நடிப்பதை விட்டு செல்ல போகிறார் என ஒரு பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதுக்குறித்து த்ரிஷா எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தியையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனாலும் த்ரிஷா சினிமாவை விட்டு செல்கிறார் என்றால் அவரும் அரசியலுக்குதான் செல்வார். கண்டிப்பாக விஜய்யின் கட்சியில் அவர் சேர்வதற்கு வாய்ப்புள்ளது என்கின்றனர் நெட்டிசன்கள்.