என்ன லூசு மாதிரி ஆடிட்டு இருக்காங்க ! – டூயட் பாடல்கள் குறித்து வெளிப்படையாக பேசிய த்ரிஷா !

கோலிவுட் நடிகைகளில் கிட்டதட்ட 20 வருடங்களாக கதாநாயகியாக இருந்து வருபவர் த்ரிஷா. தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமாக குந்தவை கதாபாத்திரம் இருந்தது. எனவே த்ரிஷாவிற்கு குந்தவை கதாபாத்திரம் தமிழ் சினிமாவிற்கு ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது.

அதையடுத்து மீண்டும் பட வாய்ப்புகளை அதிகமாக பெற்று வருகிறார் த்ரிஷா. சினிமாவிற்கு வந்த புதிதில் த்ரிஷா அனைவரிடமும் சகஜமாக பழகுபவராக இருந்தார்.

அந்த சமயத்தில் அவரிடம் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில் டூயட் பாடல்கள் குறித்து கேட்கப்பட்டது. வெளிநாடுகளில் பொது இடங்களில் கதாநாயகனும், கதாநாயகியும் டூயட் பாடலுக்கு ஆடுவது போல ஒரு காட்சி வருவதை அதிகம் பார்த்திருப்போம்.

அந்த மாதிரி சமயங்களில் அதை பார்க்கும் வெளிநாட்டவரின் மனநிலை எப்படி இருக்கும் என்ற கேள்வியை த்ரிஷாவிடம் கேட்டனர்.

அதற்கு த்ரிஷா “என்னடா இவங்க லூசு மாதிரி நடு ரோட்ல ஆடுறாங்க” என்பது போலதான் மக்கள் எங்களை பார்ப்பார்கள். என வெளிப்படையாக கூறினார்.

Refresh