சூப்பர் ஸ்டாரிடம் நேரில் வாழ்த்து பெற்ற பிரதீப் – இதுக்கு மேல என்ன வேணும்?

தற்சமயம் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் உள்ள முக்கியமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் ஏற்கனவே தமிழில் கோமாளி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் அடுத்து இயக்கிய படம் லவ் டுடே.

இந்த படத்தை ஏற்கனவே இவர் ஒரு குறும்படமாக இயக்கியிருந்தார். தற்சமயம் அதையே பெரும் படமாக இயக்கினார். மேலும் இந்த படத்தில் இவரே கதாநாயகனாக நடித்தார். எதிர்பாராத அளவிலான வரவேற்பை பெற்றது லவ் டுடே திரைப்படம்.

இதன் வெற்றியை தொடர்ந்து இனி வரும் திரைப்படங்களில் பிரதீப் கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இந்நிலையில் படத்தை பார்த்த ரஜினி பிரதீப் ரங்கநாதனை அழைத்து பாராட்டி அவருக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்துள்ளார்.

சினிமாவின் பெரும் சிகரமான ரஜினிகாந்த் ஒரு ஆரம்ப நிலை இயக்குனருக்கு இந்த அளவிற்கு மரியாதை செய்வது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதீப் ரங்கநாதன், “பேச வார்த்தையில்லை. ரஜினியின் பக்கத்தில் இருப்பது சூரியனின் பக்கத்தில் நிற்பது போன்ற உணர்வை தருகிறது” என கூறியுள்ளார் பிரதீப்.

இதனால் எதிர்காலத்தில் பிரதீப் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Refresh