Connect with us

மரியாதை கொடுத்தாதான் எதுவா இருந்தாலும்!.. அலட்சியம் செய்த பாலச்சந்தர்!.. கடுப்பான விஜயகாந்த் பட இயக்குனர் எடுத்த முடிவு!..

vijayakanth k balachandar

Cinema History

மரியாதை கொடுத்தாதான் எதுவா இருந்தாலும்!.. அலட்சியம் செய்த பாலச்சந்தர்!.. கடுப்பான விஜயகாந்த் பட இயக்குனர் எடுத்த முடிவு!..

Social Media Bar

Director K Balachandar: தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே வாய்ப்புகள் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி. சினிமா பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்த ஆர்.கே செல்வமணி புலன் விசாரணை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து சினிமாவிற்கு வரும் பொழுது ஹாலிவுட் தரத்திலான திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பது ஆர்.கே செல்வமணியின் ஆசையாக இருந்தது. அப்போதெல்லாம் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து வெளியே வரும் இயக்குனர்கள் முதலில் சந்திக்கும் நபர் விஜயகாந்தாக தான் இருக்கும்.

Vishal, Arjun, Samantha At The Irumbuthirai Success Meet

ஏனெனில் ஊமை விழிகளின் வெற்றிக்குப் பிறகு இந்த ஃபிலிம் இன்ஸ்டிடுட் மாணவர்கள் மீது விஜயகாந்திற்கு நல்ல மரியாதை இருந்தது. எனவே அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தார். இந்த நிலையில் ஆர்.கே செல்வமணி புலன் விசாரணை திரைப்படத்தின் கதையை கூறியதும் விஜயகாந்த்திற்கு பிடித்து விட்டது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இத்தனைக்கும் இந்த படத்தில் அதிகமாக பாடல்களே கிடையாது. இந்த நிலையில் அவரது ஆர்.கே செல்வமணி தனது இரண்டாவது திரைப்படமாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இதற்காக ஒரு அருவிக்கு படப்பிடிப்பிற்காக சென்ற பொழுது அங்கு பாலச்சந்தர் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது பாலச்சந்தரை சந்திக்கலாம் என்று சென்றிருந்தார் ஆர் கே செல்வமணி. அங்கு இருந்த உதவியாளர் புலன் விசாரணை திரைப்படத்தின் இயக்குனர் உங்களை சந்திக்க வந்திருக்கிறார் என்று கூறியும் கூட பாலச்சந்தர் ஆர்.கே செல்வமணியை கண்டு கொள்ளாமல் படபிடிப்பை நடத்தி இருக்கிறார்.

இதனை பார்த்த ஆர்.கே செல்வமணி இதற்கு மேல் இங்கு நின்றால் மரியாதை இல்லை என்று சென்று விட்டார். அதற்கு பிறகு தன் வாழ்நாளில் இயக்குனர் பாலச்சந்தரை திரும்ப சந்திக்கவே இல்லை என்று கூறுகிறார் ஆர்.கே செல்வமணி.

To Top