Connect with us

எங்களுக்கு பதிலா வேற யாரோ எப்படி வரலாம்? ப்ரதீப் மேல் பாய்ந்த விசித்திரா!

bigg boss 7 vichitra

Bigg Boss Tamil

எங்களுக்கு பதிலா வேற யாரோ எப்படி வரலாம்? ப்ரதீப் மேல் பாய்ந்த விசித்திரா!

எங்களுக்கு பதிலா வேற யாரோ எப்படி வரலாம்? ப்ரதீப் மேல் பாய்ந்த விசித்திரா!

Social Media Bar

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தொடரின் சீசன் 7 தொடங்கி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. போட்டி தொடங்கிய முதல் நாளே ஹவுஸ் லீடர் விஜய்யை ஈர்க்காத 6 பேரை பிக்பாஸ் சின்ன வீட்டிற்கு மாற்றினார். மேலும் சமையல் வேலை, ஹவுஸ் கீப்பிங் என அனைத்து வேலைகளையும் அந்த சின்ன வீட்டில் உள்ளவர்களே செய்ய வேண்டும் என்றும் பிக்பாஸ் சொல்லிவிட்டார்.

இந்நிலையில் இன்று சின்ன வீட்டை சேர்ந்த பவா, நிக்ஸன் உள்ளிட்டோர் சமைத்துக் கொண்டிருந்தபோது பெரிய வீட்டில் இருந்த விசித்திராவும், யுகேந்திரனும் அவர்களுக்கு உதவி செய்தனர். ஆனால் அப்படி சின்ன வீட்டுக்காரர்களுக்கு பெரிய வீட்டில் உள்ளவர்கள் உதவி செய்யக் கூடாது என கண்டித்த பிக்பாஸ், உதவி செய்த விசித்திராவையும், யுகேந்திரனையும் சின்ன வீட்டிற்கு போக சொல்லிவிட்டார்.

அப்போது ப்ரதீப் “இவங்க ரெண்டு பேரும் சின்ன வீட்டுக்கு போன அங்கிருந்து ரெண்டு பேரை இங்க அனுப்பி விட்ருங்க” என பிக்பாஸிடம் கேட்டதால் விசித்திரா கடுப்பானார். “நாங்க சின்ன வீட்டுக்கு போனா எங்களுக்கு பதிலா இங்க வேற யாரும் ஏன் வரணும்?” என விசித்திரா கேட்க.. உங்க வேலையெல்லாம் யாரு செய்வா? என ப்ரதீப் கேட்க, இரண்டு பேருக்கும் இடையே பெரும் பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் கடுப்பான ஹவுஸ் லீடர் விஜய்யும் ஒரு பக்கம் கோபமாக சில வார்த்தைகள் பேச இரண்டாம் நாளிலேயே ஹவுஸ் மேட்ஸிற்குள் பயங்கர சண்டை தொடங்கியுள்ளது.

To Top